தந்தையின் இறுதி சடங்குகள் குறித்த முக்கிய தகவலை பகிர்ந்து கொண்ட அஜித்குமாரின் சகோதரர்! விவரம் உள்ளே

நடிகர் அஜித் குமாரின் தந்தை அஸ்தி கரைக்கப்பட்டது,ajith kumar father remains got dissolved p subramaniam | Galatta

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் அஜித்குமார் நடிப்பில் கடைசியாக வந்த துணிவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து தனது அடுத்த படமாக அஜித்குமார் நடிக்கும் AK62 படத்தின் அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருக்கின்றனர். லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் AK62 திரைப்படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர் அறிவிப்புகள் வெகு விரைவில் வெளிவரும் என தெரிகிறது. இதனிடையே கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்பு நடிகர் அஜித்குமாரின் தந்தை P.சுப்பிரமணியம் அவர்கள் காலமானார். 

இதுகுறித்து நடிகர் அஜித் தரப்பில் இருந்து ,
எங்களது தந்தையார் திரு. பி.எஸ்.மணி(85 வயது) அவர்கள் பல நாட்களாக உடல்நலமின்றி படுக்கையில் இருந்து வந்தார். இன்று அதிகாலை தன்னுடைய தூக்கத்தில் உயிர் நீத்தார். கடந்த நான்கு ஆண்டுகளாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த எங்கள் தந்தையை அன்போடும், அக்கரையோடும் கவனித்து வந்தும், எங்கள் குடும்பத்திற்கு உறுதுணையாக இருந்த அனைத்து மருத்துவர்களுக்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். எங்கள் தந்தையார் சுமார் அறுபது ஆண்டு காலமாக எங்கள் தாயின் அன்போடும், அற்பணிப்போடும் ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். இந்த துயர நேரத்தில், பலர் எங்கள் தந்தையாரின் இறப்பு செய்தியை பற்றி விசாரிக்கவும், எங்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்வதற்காகவும் எங்களை தொலைபேசியிலோ, கைபேசியிலோ அழைப்பு விடுத்தோ அல்லது குறுந்தகவல் அனுப்பியோ விசாரித்து வருகின்றனர். தற்போதுள்ள சூழலில் எங்களால் உங்கள் அழைப்பை மேற்கொள்வதற்கோ அல்லது பதில் தகவல் அனுப்ப இயலாதமையை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறோம். எங்கள் தந்தையாரின் இறுதி சடங்குகள் ஒரு குடும்ப நிகழ்வாகவே இருக்க கருதுகிறோம். எனவே இந்த இறப்பு தகவலை அறிந்த அனைவரும் எங்களுடைய துயரத்தையும், இழப்பையும் புரிந்துகொண்டு, குடும்பத்தினர் துக்கத்தை அனுசரிக்கவும், இறுதி சடங்குகளை தனிபட்ட முறையில் செய்யவும் ஒத்துழைக்கும்படி வேண்டிக்கொள்கிறோம்.
அனுப் குமார், அஜீத் குமார்,அனில்குமார்

என அதிகாரப்பூர்வ அறிக்கையின் வெளியிடப்பட்டது.தொடர்ந்து பல கோடி ரசிகர் பெருமக்களும் பிரபலங்களும் தங்களது இரங்கலை தெரிவித்தனர்.

இந்நிலையில் நடிகர் அஜித்குமாரின் உடன் பிறந்த சகோதரர் அனில் குமார் தனது தூதரகத்தில் அஜித்குமாரின் தந்தையின் இறுதி சடங்குகள் நிறைவடைந்து அஸ்தி கரைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பதிவிட்ட அந்த பதிவு இதோ…

 

வெற்றிமாறன் படத்தின் டைட்டிலுக்கு எழுந்த கேள்வி.. கடுமையாக விமர்சித்த எழுத்தாளர்.. – வைரலாகும் பதிவு இதோ..
சினிமா

வெற்றிமாறன் படத்தின் டைட்டிலுக்கு எழுந்த கேள்வி.. கடுமையாக விமர்சித்த எழுத்தாளர்.. – வைரலாகும் பதிவு இதோ..

நடிகை யாஷிகா ஆனந்திற்கு பிடிவாரண்ட்.. – நீதிமன்றம் அதிரடி உத்தரவு.. விவரம் இதோ..
சினிமா

நடிகை யாஷிகா ஆனந்திற்கு பிடிவாரண்ட்.. – நீதிமன்றம் அதிரடி உத்தரவு.. விவரம் இதோ..

ரசிகர்களுக்கு அடுத்தடுத்த சர்ப்ரைஸ்களை கொடுத்து வரும் லைகா நிறுவனம்.. -  பிரபல ஹீரோவின் புதுப்பட போஸ்டர் இதோ..
சினிமா

ரசிகர்களுக்கு அடுத்தடுத்த சர்ப்ரைஸ்களை கொடுத்து வரும் லைகா நிறுவனம்.. - பிரபல ஹீரோவின் புதுப்பட போஸ்டர் இதோ..