விஷாலின் அதிரடி ஆக்சன் பட பாடல் படைத்த அட்டகாசமான சாதனை... கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

விஷாலின் எனிமி பட டம் டம் பாடல் படைத்த புது சாதனை,vishal in enemy movie tum tum song new record | Galatta

தனக்கென தனி பாணியில் அடுத்தடுத்து அதிரடியான ஆக்சன் திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஷால். அந்த வகையில் கடைசியாக கடந்த 2022ம் ஆண்டு இறுதியில் காவல்துறை அதிகாரியாக விஷால் நடித்து வெளிவந்த லத்தி திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து நடிகராக மட்டுமல்லாமல் தற்போது இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ள நடிகர் விஷால் துப்பறிவாளன் 2 திரைப்படத்தை இயக்கி நடிக்கவுள்ளார். வெகுவிரைவில் துப்பறிவாளன் 2 படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக 1960களில் நடைபெறும் கதை களத்தை மையமாக கொண்ட கேங்ஸ்டர் திரைப்படமாக விஷால் மற்றும் SJ.சூர்யா இணைந்து நடிக்கும் திரைப்படம் மார்க் ஆண்டனி. இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட மார்க் ஆண்டனி திரைப்படத்தில் ரிது வர்மா, இயக்குனர் செல்வராகவன், புஷ்பா படத்தில் மிரட்டலாக நடித்த பிரபல தெலுங்கு நடிகர் சுனில், நிழல்கள் ரவி, Y.gee.மகேந்திரன், ரெட்டின் கிங்ஸ்லி, அபிநயா மற்றும் மலேசிய நடிகர் DSG உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மினி ஸ்டுடியோ சார்பில் தயாரிப்பாளர் வினோத்குமார் தயாரிக்க, அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவில், விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு செய்யும் மார்க் ஆண்டனி படத்திற்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். 

ஏற்கனவே மினி ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் வினோத் குமார் அவர்களின் தயாரிப்பில் விஷால் நடித்த திரைப்படம் எனிமி. அரிமா நம்பி & இருமுகன் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால் மற்றும் ஆர்யா இணைந்து எனிமி படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்தனர். முன்னதாக இயக்குனர் பாலாவின் அவன் இவன் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் விஷால் மற்றும் ஆர்யா இணைந்து எனிமி படத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பக்கா ஆக்சன் திரில்லர் திரைப்படமாக வெளிவந்த எனிமி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

முன்னணி இசையமைப்பாளர் தமன்.S இசையில் எனிமி படத்தில் இடம் பெற்ற டம் டம் பாடல் வேற லெவல் வைரல் ஹிட் ஆனது. டிக் டாக், யூட்யூப் ஷார்ட்ஸ், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் என அனைத்திலும் டம் டம் பாடல் பயங்கர ட்ரெண்ட் ஆனது. இதுவரை யூட்யூபில் 369 மில்லியனுக்கு மேல் பார்க்கப்பட்ட பாடலாக ரசிகர்களால் கொண்டாடப்படும் இந்த டம் டம் பாடல் தற்போது மேலும் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளது. யூட்யூபில் உலக அளவில் 30 பாப்புலர் பாடல்களின் பட்டியலில் டம் டம் பாடல் இடம் பிடித்து அதிரடி சாதனை படைத்துள்ளது என படக் குழுவினர் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அந்த அறிவிப்பு இதோ…
 

Our "Tum Tum" Music Video got Featured at #30 on the Most Popular Music Videos on YouTube.https://t.co/sGUd9GRe35@VishalKOfficial @MusicThaman @mirnaliniravi @arya_offl pic.twitter.com/5oPtFn8Bsn

— Vishal (@VishalKOfficial) March 24, 2023

உலகநாயகன் கமல்ஹாசன் - சீயான் விக்ரம் - சிலம்பரசன்TR ஆகியோர் அஜித் குமாரின் தந்தை மறைவுக்கு இரங்கல்! விவரம் உள்ளே
சினிமா

உலகநாயகன் கமல்ஹாசன் - சீயான் விக்ரம் - சிலம்பரசன்TR ஆகியோர் அஜித் குமாரின் தந்தை மறைவுக்கு இரங்கல்! விவரம் உள்ளே

கோபி தான் FRAUD, ராதிகாவ திட்டாதீங்க... ரேஷ்மா பசுபுலேட்டி FANS MEETல் போனில் பேசிய பாக்யலக்ஷ்மி! கலகலப்பான வீடியோ இதோ
சினிமா

கோபி தான் FRAUD, ராதிகாவ திட்டாதீங்க... ரேஷ்மா பசுபுலேட்டி FANS MEETல் போனில் பேசிய பாக்யலக்ஷ்மி! கலகலப்பான வீடியோ இதோ

அஜித் குமாரின் தந்தை மறைவுக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் மு க ஸ்டாலின் & நேரில் மரியாதை செலுத்திய உதயநிதி ஸ்டாலின்! விவரம் உள்ளே
சினிமா

அஜித் குமாரின் தந்தை மறைவுக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் மு க ஸ்டாலின் & நேரில் மரியாதை செலுத்திய உதயநிதி ஸ்டாலின்! விவரம் உள்ளே