ரவிக்கு அப்போ ஒண்ணுமே தெரியாது... ஜெயம் பட அனுபவங்களை பகிர்ந்து கொண்ட ஷகீலா! வீடியோ உள்ளே

ஜெயம் ரவியுடன் பணியாற்றிய அனுபவங்கள் குறித்து பேசிய ஷகீலா,shakeela shares working experience with jayam ravi | Galatta

கவர்ச்சி என்றாலே ஷகீலா என்று ஒரு அர்த்தமும் உண்டு என சொல்லும் அளவிற்கு தனது கவர்ச்சிக்காக மிகப் பிரபலமடைந்தவர் நடிகை ஷகீலா. SOFT PORN என்று அழைக்கப்படும் கவர்ச்சி திரைப்படங்கள் வாயிலாகவும் பல திரைப்படங்களில் கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடித்தும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த பிரபலமடைந்த நடிகை ஷகீலா கடந்த 1995 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த ப்ளே கேர்ள்ஸ் திரைப்படத்தின் மூலம் நடிகையாக களமிறங்கி தொடர்ந்து தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். அதிலும் குறிப்பாக தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் ஷகீலா நடிப்பில் வெளிவந்த திரைப்படங்கள் அந்த காலகட்டத்தில் பெரிய ஹீரோக்களின் திரைப்படங்களுக்கு இணையாக ஓடி சாதனை படைத்த கதைகளும் உண்டு. 

கவர்ச்சி படங்களில் நடிப்பதற்கு ஷகீலாவை விட சிறந்த நடிகை யாருமில்லை என சொல்லும் அளவிற்கு திரையுலகில் கொடிகட்டி பறந்த அதே சமயத்தில் தான் கவர்ச்சி படங்களிலும் கவர்ச்சி கதாபாத்திரங்களிலும் நடிப்பதை நிறுத்துவதாக ஷகீலா அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். SOFT PORN எனப்படும் அந்த மாதிரியான கவர்ச்சி திரைப்படங்களில் சென்சருக்கு பிறகு ஷகீலாவுக்கு பதிலாக பாடி டபுள் செய்து "BIT" சேர்க்கப்பட்டு திரைப்படங்கள் வெளியானதால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான அதே சமயத்தில் இவரது பல திரைப்படங்களுக்கு சென்சாரில் சான்றுகள் வழங்கப்படாமல் இருந்தது இன்னும் பெரும் வருத்தத்தை கொடுத்தது. இந்த நிலையில் தான் கவர்ச்சி திரைப்படங்களில் நடிப்பதை ஷகீலா முழுவதுமாக நிறுத்தினார். ஆனாலும் தொடர்ந்து ஷகீலாவை அணுகிய ஒவ்வொரு கதாபாத்திரங்களும் இது மாதிரியான கதாபாத்திரங்களாகவே இருக்க, தனது படங்களையும் மிகத் தேர்ந்தெடுத்தே ஷகிலா நடித்து வந்தார். 

முன்னதாக விஜய் தொலைக்காட்சியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட ஷகீலாவுக்கு அதற்கு முன்பு இருந்த கவர்ச்சி கண்ணோட்டம் முற்றிலுமாக உடைபட்டு புதிய பரிமாணம் மக்களிடையே பரவியது. ஷகீலா அம்மா என்று சொல்லும் அளவிற்கு ஷகீலாவிற்கு தங்களது மனதில் மிகப்பெரிய அங்கீகாரத்தை ரசிகர்கள் கொடுத்தனர். இதனிடையே நமது கலாட்டா சேனலில் நடிகை ஷகீலாவின் ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நடிகை ஷகீலா தனது திரைப்பயண அனுபவங்கள் குறித்து பல சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் ஜெயம் ரவி அவர்கள் பற்றி கேட்டபோது, 

“ரவி என்னுடன் கூட பிறக்காத தம்பி… ராஜா (இயக்குனர் மோகன் ராஜா) அண்ணாவை அண்ணா என்று சொல்வேன்... ஜெயம் திரைப்படத்திலிருந்து நான் பணியாற்றி இருக்கிறேன். அந்தப் படத்திற்கு வந்த போது அவருக்கு ஒன்றுமே தெரியாது. மற்ற நான்கு பசங்க இருப்பார்கள் அந்த நான்கு பேரோடு தான் இருப்பார். அவருடைய படம் அவர் ஒரு ஹீரோ அந்த மாதிரி எல்லாம் காண்பித்துக் கொள்ள கூடத் தெரியாது” என தெரிவித்துள்ளார். இன்னும் பல சுவாரசியங்கள் பகிர்ந்து கொண்ட நடிகை ஷகீலாவின் அந்த முழு பேட்டி இதோ…
 

கோபி தான் FRAUD, ராதிகாவ திட்டாதீங்க... ரேஷ்மா பசுபுலேட்டி FANS MEETல் போனில் பேசிய பாக்யலக்ஷ்மி! கலகலப்பான வீடியோ இதோ
சினிமா

கோபி தான் FRAUD, ராதிகாவ திட்டாதீங்க... ரேஷ்மா பசுபுலேட்டி FANS MEETல் போனில் பேசிய பாக்யலக்ஷ்மி! கலகலப்பான வீடியோ இதோ

அஜித் குமாரின் தந்தை மறைவுக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் மு க ஸ்டாலின் & நேரில் மரியாதை செலுத்திய உதயநிதி ஸ்டாலின்! விவரம் உள்ளே
சினிமா

அஜித் குமாரின் தந்தை மறைவுக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் மு க ஸ்டாலின் & நேரில் மரியாதை செலுத்திய உதயநிதி ஸ்டாலின்! விவரம் உள்ளே

'தமிழின்றி நாம் இல்லை!'- விஜய் டிவி ப்ரோமோவில் மாண்புமிகு முதல்வர் மு க ஸ்டாலின்! அட்டகாசமான வீடியோ இதோ
சினிமா

'தமிழின்றி நாம் இல்லை!'- விஜய் டிவி ப்ரோமோவில் மாண்புமிகு முதல்வர் மு க ஸ்டாலின்! அட்டகாசமான வீடியோ இதோ