சிலம்பரசன்TRன் பத்து தல பட புதிய ஸ்பெஷல் ட்ரீட் ரெடி… அட்டகாசமான அடுத்த சர்ப்ரைஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!

பத்து தல படத்தின் ராவடி வீடியோ பாடல் ரிலீஸ் அறிவிப்பு,silambarasan tr in pathu thala raawadi video song release announcement | Galatta

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் சிலம்பரசன்.TR நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் வெந்து தணிந்தது காடு. பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் கதையில் வழக்கமான இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனின் திரைப்படங்களில் இருந்து மாறுபட்டு புதிய வித்தியாசமான கேங்ஸ்டர் திரைப்படமாக ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று மெகா ஹிட்டான வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் இரண்டாவது பாகமும் விரைவில் தயாராக உள்ளது. தொடர்ந்து சிலம்பரசன்.TR தன் திரைப்பயணத்தில் 48 வது படமாக உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் புதிய படத்தில் நடிக்கிறார். இந்த STR48 திரைப்படத்தை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே சில்லுனு ஒரு காதல் மற்றும் நெடுஞ்சாலை திரைப்படங்களின் இயக்குனர் ஒபெலி.N.கிருஷ்ணா இயக்கத்தில் சிலம்பரசன்.TR நடித்துள்ள பத்து தல திரைப்படம் வருகிற மார்ச் 30 ஆம் தேதி பத்து தல திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான மஃப்டி படத்தின் ரீமேக்காக சிலம்பரசன்.TR மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள பத்து தல திரைப்படத்தில், பிரியா பவானி ஷங்கர், கலையரசன்,அனு சித்தாரா மற்றும் டீஜே அருணாசலம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஸ்டூடியோ கிரீன் சார்பில் K.E.ஞானவேல் ராஜா தயாரிக்கும் பத்து தல படத்திற்கு ஃபரூக்.J.பாஷா ஒளிப்பதிவில், பிரவீன்.KL படத்தொகுப்பு செய்ய இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளிவந்த பத்து தல திரைப்படத்தின் நம்ம சத்தம் பாடல் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் ஏ.ஆர்.அமீன் குரலில் வெளிவந்த நினைவிருக்கா பாடலும் ரசிகர்களின் மனதை வருடியது.

சமீபத்தில் பத்து தல படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா நடைபெற்றதை தொடர்ந்து வெளிவந்த ட்ரெய்லர் இன்னும் பெரிய எதிர்பார்ப்புகளை கூட்டியது. இந்த நிலையில் ரசிகர்களை இன்னும் உற்சாகப்படுத்தும் வகையில் பத்து தல படத்தில் இடம் பெற்றுள்ள ராவடி பாடலின் வீடியோ பாடல் நாளை (மார்ச் 26) மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். முன்னணி நடிகை சாயிஷா இந்த பாடலுக்கு நடனமாடியுள்ளார் என்பதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக வெளிவந்த ராவடி பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், நாளை வீடியோ பாடல் வெளியாக உள்ளது. ராவடி வீடியோ பாடல் ரிலீஸ் அறிவிப்பை தெரிவிக்கும் வகையில் படக்குழு வெளியிட்ட புதிய போஸ்டர் இதோ…
 

Blockbuster #Raawadi full song visual coming up.

Get ready to watch the spectacular moves of #Sayyeshaa and #GauthamKarthik in #RaawadiVideoSong from #PathuThala

Releasing on 25th March at 5:04PM

Stay Tuned ✨✨

An @arrahman Musical
🎤 @SingerNivas & @shubamusic pic.twitter.com/yURkNR0CPH

— Studio Green (@StudioGreen2) March 24, 2023

அந்த மாதிரி ஒரு நாள் இருந்திருந்தா நான் வேற லெவல்... நயன்தாரா குறித்து மனம் திறந்து பேசிய ஷகீலா! வைரல் வீடியோ இதோ
சினிமா

அந்த மாதிரி ஒரு நாள் இருந்திருந்தா நான் வேற லெவல்... நயன்தாரா குறித்து மனம் திறந்து பேசிய ஷகீலா! வைரல் வீடியோ இதோ

உலகநாயகன் கமல்ஹாசன் - சீயான் விக்ரம் - சிலம்பரசன்TR ஆகியோர் அஜித் குமாரின் தந்தை மறைவுக்கு இரங்கல்! விவரம் உள்ளே
சினிமா

உலகநாயகன் கமல்ஹாசன் - சீயான் விக்ரம் - சிலம்பரசன்TR ஆகியோர் அஜித் குமாரின் தந்தை மறைவுக்கு இரங்கல்! விவரம் உள்ளே

கோபி தான் FRAUD, ராதிகாவ திட்டாதீங்க... ரேஷ்மா பசுபுலேட்டி FANS MEETல் போனில் பேசிய பாக்யலக்ஷ்மி! கலகலப்பான வீடியோ இதோ
சினிமா

கோபி தான் FRAUD, ராதிகாவ திட்டாதீங்க... ரேஷ்மா பசுபுலேட்டி FANS MEETல் போனில் பேசிய பாக்யலக்ஷ்மி! கலகலப்பான வீடியோ இதோ