அந்த மாதிரி ஒரு நாள் இருந்திருந்தா நான் வேற லெவல்... நயன்தாரா குறித்து மனம் திறந்து பேசிய ஷகீலா! வைரல் வீடியோ இதோ

நயன்தாரா குறித்து ஷகீலா மனம் திறந்து பேசிய வீடியோ,shakeela opens about nayanthara in galatta tamil fans meet | Galatta

இந்திய சினிமாவில் கவர்ச்சி நடிகைகளில் மிக முக்கியமானவர் நடிகை ஷகீலா. தென்னிந்திய சினிமாவில் பிரபல கதாநாயகிகளுக்கு இணையாக ரசிகர்கள் மத்தியில் புகழ் பெற்ற நடிகை ஷகீலா, கடந்த 1995 ஆம் ஆண்டு வெளிவந்த ப்ளே கேர்ள்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வரும் நடிகை ஷகீலா தனது கவர்ச்சி படங்களால் மக்களின் மனதில் இடம் பிடித்தவர். அந்த காலகட்டத்தில் ஷகீலா நடிப்பில் வெளிவந்த SOFT PORN படங்கள் என சொல்லப்படும் கவர்ச்சி திரைப்படங்கள் பெரிய ஹீரோக்களின் திரைப்படங்களுக்கு இணையாக திரையரங்குகளில் வெற்றிகராமமாக ஓடின.

பின்னர் ஒரு காலகட்டத்திற்கு பிறகு கவர்ச்சி திரைப்படங்களிலும் கவர்ச்சியான கதாபாத்திரங்களிலும் நடிப்பதையே முற்றிலும் நிறுத்திவிட்ட நடிகை ஷகீலா தற்போது விஜய் தொலைக்காட்சியின் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றாக மக்களை மகிழ்வித்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். இத்தனை ஆண்டுகளாக ஷகீலா மீது இருந்த மொத்த கண்ணோட்டத்தையும் ஒரேடியாக மாற்றி அன்னை ஸ்தானத்திற்கு ஷகீலா கொண்டு வந்து நிறுத்தியது குக் வித் கோமாளி நிகழ்ச்சி.

இதனிடைய நமது கலாட்டா சேனலில் நடைபெற்ற ரசிகர்கள் சந்திப்பில் நமது கேள்விகளுக்கு பதில் அளித்த ஷகீலா தனது திரைப்பயண அனுபவங்கள் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அவர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என கேட்டபோது,

நயன்தாரா அவர்கள் இப்போது லேடி சூப்பர் ஸ்டார்... ரொம்ப கடின உழைப்பாளி அவருடைய உடலை பராமரித்துக் கொள்வதற்கு அவர்கள் எவ்வளவு குறைவாக சாப்பிட வேண்டும் அதெல்லாம் மிகவும் கஷ்டம் அல்லவா... அந்த மாதிரி எல்லாம் நான் ஒரு நாள் இருந்திருந்தால் கூட நான் வேற லெவலில் இருந்து இருப்பேன். ஒரு நாள் கூட நான் சாப்பாட்டை குறைத்துக் கொண்டு இருந்தது கிடையாது. இவர் செய்வது கடின உழைப்பு. மேலும் இப்போது அவர் செய்துள்ள அந்த வாடகை தாய் மூலம் பெற்ற குழந்தைகள்... இப்போது சமீபத்தில் வந்த வீடியோவில் அந்த குழந்தைகளை தூக்கிக் கொண்டு பாம்பேவில் இருந்து வரும் அந்த வீடியோ எனக்கு ரொம்ப பிடித்தது. அந்த வீடியோவில் அவர்கள் அந்த குழந்தையை அப்படியே தன் நெஞ்சோடு வைத்து அழைத்து வந்தது எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்திருந்தது. அந்த விஷயம் எனக்கு அவர்களிடம் ரொம்ப பிடித்திருந்தது" என தெரிவித்துள்ளார். நடிகை ஷகீலாவின் அந்த முழு வீடியோ இதோ
 

அஜித் குமாரின் தந்தை மறைவுக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் மு க ஸ்டாலின் & நேரில் மரியாதை செலுத்திய உதயநிதி ஸ்டாலின்! விவரம் உள்ளே
சினிமா

அஜித் குமாரின் தந்தை மறைவுக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் மு க ஸ்டாலின் & நேரில் மரியாதை செலுத்திய உதயநிதி ஸ்டாலின்! விவரம் உள்ளே

'தமிழின்றி நாம் இல்லை!'- விஜய் டிவி ப்ரோமோவில் மாண்புமிகு முதல்வர் மு க ஸ்டாலின்! அட்டகாசமான வீடியோ இதோ
சினிமா

'தமிழின்றி நாம் இல்லை!'- விஜய் டிவி ப்ரோமோவில் மாண்புமிகு முதல்வர் மு க ஸ்டாலின்! அட்டகாசமான வீடியோ இதோ

ரோஜா சீரியல் நாயகி பிரியங்கா நல்காரிக்கு திடீர் திருமணம்... சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகும் புகைப்படங்கள் இதோ!
சினிமா

ரோஜா சீரியல் நாயகி பிரியங்கா நல்காரிக்கு திடீர் திருமணம்... சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகும் புகைப்படங்கள் இதோ!