“காதலர் தினத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து” பாஜகவினர் நாய்களுக்கு திருமணம் செய்து வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் அதுவும் விழுப்புறம் மற்றும் நெல்லை மாவட்டங்களில் தான் இப்படியான ஒரு பரபரப்பு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

உலகம் முழுவதும் காதலர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. அதன்படி, உலகம் முழுவதும் உள்ள காதலர்கள், தங்களது அன்பினை தங்களுக்கு பிடித்தவர்களிடம் பல விதமாக வெளிப்படுத்தி தங்களது அன்பை பரிமாறிக்கொண்டனர்.

அத்துடன், காதலர் தினத்தையொட்டி தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களில் காதல் ஜோடிகளின் கூட்டம் அலை மோதியது. 

அதன்படி, காதலர்கள் ஒருவருக்கொருவர் பூக்கள் பரிமாறிக்கொண்டும், சாக்லேட் கொடுத்து தங்களது அன்பை வெளிப்படுத்திக்கொண்டும், ஜோடியாக கடற்கரை உள்ளிட்ட பொழுதுபோக்கு பூங்காக்களில் ஜோடி போட்டு வலம் வந்ததுடன், சற்று உற்சாகத்துடன் மகிழ்து கானப்பட்டனர்.

இப்படியான சூழலில் தான், இந்த காதலர் தினத்தை எதிர்க்கிறேன் என்ற பெயரில் சிலர் சற்று நூதனமான முறையில் நடந்துகொண்டனர்.

காதலர் தினத்தை குறிப்பிட்ட சில அமைப்பினரும், கட்சியினரும் கடந்த காலங்களில் தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர்.

அந்த வகையில் தான், விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள தென் சிறுவளூர் என்னும் பகுதியில் காதலர் தினத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அந்த பகுதியைச் சேர்ந்த பாஜக வினர், அந்த பகுதியில் சுற்றித் திரிந்த நாய்களுக்கு சற்று வித்தியாசமான முறையில் திருமணம் செய்து வைத்தனர்.

அத்துடன், இது தொடர்பான போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் அந்த வகுதியில் அதிகம் பகிரப்பட்ட நிலையில், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அதே போல், மற்றொரு சம்பவம் நெல்லை மாவட்டத்திலும் நேற்றைய தினம் நடந்து உள்ளது. 

அதன் படி, நெல்லை மாவட்டம் சேரன்மா தேவி அருகே உள்ள பிராஞ்சேரி கிராமத்தில், இந்து முன்னணி அமைப்பினர் நேற்று அந்த பகுதியில் சுற்றித் திரிந்த 2 தெரு நாய்களை பிடித்து மாலை மாற்றி திருமணம் செய்து வைத்தனர். இது தொடர்பான புகைப்படங்களும், அந்த பகுதியில வைரலானது.

இது தொடர்பாக நாய்களுக்கு திருமணம் செய்து வைத்த அந்த அமைப்பினர் பேசும் போது, “காதலர் தினத்திற்கு எதிராக தெரு நாய்களுக்கு நாங்கள் திருமணம் செய்து வைத்து உள்ளோம்” என்றும், கருத்து தெரிவித்தனர். இதனால், அந்த பகுதியிலும் பரபரப்பு ஏற்பட்டது.