சிக்னலில் நின்றுகொண்டிருந்த வாகனங்கள் மீது அடுத்தடுத்து லாரி மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் இப்படி ஒரு சோகமான சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை - புனே தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 6.30 மணி அளவில், ஒன்றன் பின் ஒன்றாக அதிக அளவிலான வாகனங்கள் சென்றுகொண்டிருந்தன. 

அப்போது, அந்த தேசிய நெடுஞ்சாலையில் ஹொபொலி என்ற பகுதியில் உள்ள சிக்னலில் வாகனங்கள் வரிசையாக காத்துக்கொண்டிருந்தன.

இதனால், அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டன. இப்படியாக நீண்ட நேரமாக அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படவே அந்த சிக்னலில் நின்றுக்கொண்டிருந்த வாகனங்கள் யாவும் மெதுவாக ஊர்ந்து சென்றுக்கொண்டிருந்தன. 

அப்போது, அந்த சாலையில் வேகமாக வந்த லாரி ஒன்று, திடீரென்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து மெதுவாக சென்றுக்கொண்டிருந்த கார்கள் மீது அடுத்தடுத்து வேகமாக மோதி உள்ளது.

அதாவது, அந்த சிக்னலில் சென்றுக்கொண்டிருந்த கார்கள், இருசக்கரவாகனங்கள் என்று மெதுவாக முன்னே சென்றுகொண்டிருந்த வாகனங்கள் மீது, பின்னால் வேகமாக வந்த லாரி மோதி உள்ளது. 

பார்ப்பதற்கே சினிமாவில் நடப்பது போல் இருந்த இந்த பயங்கரமான விபத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 

அந்த குடும்பத்தினர் பயணித்த கார் மீது லாரி வேகமாக மோதியதில் காரில் இருந்த 4 பேரும் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 
அத்துடன், இந்த பயங்கர விவத்தில் கிட்டதட்ட 7 பேர் படுகாயம் அடைந்தனர். 

இது குறித்து தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர், இந்த விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவர்கள் 7 பேருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனையடுத்து, இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால், அந்த பகுதியில் பல மணி நேரமாக போக்குவரத்து நெரில் ஏற்பட்டது.