உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.

allanganallur jalikattu

பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய ஊர்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக பிரசித்தி பெற்றதாகும். மதுரை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையன்று மதுரை அவனியாபுரத்திலும், அதற்கு அடுத்த நாள் பாலமேட்டிலும், தை மாதம் 3-ந் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு விமரிசையாக நடைபெறும்.

இந்நிலையில் இந்த ஆண்டு கொரோனா அதிக அளவில் பரவி வருவதை கருத்தில் கொண்டு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி அளித்தது. அதன்படி அனைத்து ஏற்பாடுகளும் மதுரை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் செய்யப்பட்டது. நேற்று முன்தினம் மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு சிறப்பாக நடந்து முடிந்தது.

இதன் தொடர்ச்சியாக பாலமேடு ஜல்லிக்கட்டு நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. காலை சரியாக 8 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. அமைச்சர்கள் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர், விதிமுறைகளை வாசித்தார். அதன்படி மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

மேலும் முன்னதாக பாலமேடு கிராம கமிட்டி சார்பில் மகாலிங்கசுவாமி கோவிலில் வழிபாடு நடைபெற்று, முதலில் கோவில் காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. அதனை மாடுபிடி வீரர்கள் யாரும் பிடிக்கவில்லை. அதன் பிறகு, வாடிவாசல் வழியாக ஜல்லிக்கட்டு காளைகள் சீறி வந்தன. அவற்றை மாடுபிடி வீரர்கள் உற்சாகமாக பிடித்தனர்.

பொங்கல் தினமான நேற்று முன்தினம் மதுரை அவனியாபுரத்தில் நடந்த ஜல்லிக்கட்டு விழாவிலும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை. இதில் 300 மாடுபிடி வீரர்களும், 700 காளைகளும் பங்கேற்றன. ஒவ்வொரு சுற்றிலும் தலா 50 மாடுபிடி வீரர்கள் அனுமதிக்கப்பட்டு, ஒரு மணி நேரத்திற்கு ஒரு சுற்றாக போட்டி நடைபெற்றது. இருந்தாலும் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள், மாடுகளின் உரிமையாளர்கள் காயம் அடைந்தனர். அந்த வகையில் கடந்த 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் முறையே அவனியாபுரம் மற்றும் பாலமேடு ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. இந்த நிலையில் தற்போது மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. 

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர். இதையடுத்து முதலாவதாக கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. இந்த போட்டியில் 700 காளைகள் மற்றும் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்கின்றனர். இந்த போட்டியை நேரில் காண 150 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

மேலும் இந்த போட்டியில் சிறந்த காளைக்கு முதலமைச்சர் சார்பிலும் சிறந்த மாடுபிடி வீரருக்கு உதயநிதி ஸ்டாலின் சார்பிலும் கார் பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தங்கம் மற்றும் வெள்ளி காசுகள், கிரைண்டர், குக்கர், பிரிட்ஜ் உள்ளிட்ட பரிசுகளும் வழங்கப்பட உள்ளன.