பள்ளி மாணவி மாயமான வழக்கில் மாணவியை கடத்திச் சென்ற டியூஷன் ஆசிரியரை தேடுவதாக காவல் துறை அறிவித்து உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது, கோவை சரவணம்பட்டி காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு ஜூலை 30 ஆம் தேதி கடைக்கு செல்வதாக் கூறி வீட்டை தனது விட்டுச் சென்ற 16 சிறுமி ஒருவர் திடீரென்று மாயமானார்.

வீட்டில் இருந்து மகளை காணவில்லை என்று, அந்த சிறுமியின் பெற்றோர் அந்த பகுதி முழுவதும் தேடிப் பார்த்து விட்டு, அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

இந்த புகார் குறித்து முதலில் காணாமல் போனதாக வழக்குப் பதிவு செய்த சரவணம்பட்டி போலீசார், இது தொடர்பாக நடத்திய விசாரணைக்குப் பிறகு, அந்த மாணவி கடத்தப்பட்டது தெரிய வந்தது.

இதனால், அதிர்ச்சியடைந்த போலீசார், தனிப்படை அமைத்து மாயனமான மாணவியை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் தான், அரசுப் பள்ளியில் படிக்கும் 11 ஆம் வகுப்பு மாணவி, தனது வீட்டருகே ட்யூஷன் எடுத்து வந்த ஆசிரியர் ஒருவரிடம் கணக்குப் பாடம் பயின்று வந்ததும் தெரிய வந்தது. 

அத்துடன், அந்த டீயூஷன் ஆசிரியரே அந்த மாணவியை கடத்திச் சென்றதும் விசாரணையில் தெரிய வந்தது. 

இனையடுத்து, சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த ஆசிரியர் மணிமாறன் என்பவர் மீதும், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான ஆசிரியரையும், கடத்தப்பட்ட அந்த மாணவியையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும், மாணவியை கடத்திச் சென்ற அந்த ஆசிரியருக்கு ஏற்கெனவே கல்யாணம் ஆகி குழந்தை உள்ள நிலையில், மனைவியை பிரிந்து கோவையில் வசித்து வந்ததும் தெரிய வந்தது.

இதே போன்று நாகர்கோவில் மாவட்டத்திலும் சிறுமி காணாமல் போன வழக்கில், மணிமாறனுக்கு தொடர்பு இருப்பதும் காவல் துறையினர் விசாரணையில் தற்போது தெரிய வந்து உள்ளது. 

இந்த நிலையில் தான், டியூஷன் ஆசிரியர் மணிமாறன் புகைப்படம் போஸ்டராக ஒட்டப்பட்டு, பள்ளி மாணவி மாயமான வழக்கில் தேடப்பட்டு வருவதாகவும், அவரது அடையாளங்களை குறிப்பிட்டு சரவணம்பட்டி போலீசார் தற்போது போஸ்டர் ஒட்டி அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். 

இதனிடையே, கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு, பள்ளிகளில் சக ஆசிரியரால் பள்ளி மாணவிகளுக்குத் தொடர்ச்சியாக பாலியல் புகார்கள் அளிக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த நிலையில், இங்கே ஒரு டியூஷன் ஆசிரியர் ஒரு மாணவியை கடத்திச் சென்று ஒரு வருடம் ஆகி உள்ள நிலையில், அந்த டியூஷன் ஆசிரியர் தற்போது போலீசாரால் தேடப்படும் குற்றவாளியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது பெற்றோர்கள் மத்தியிலும் சக ஆசிரியர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.