வீட்டின் மாடியில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன், மின்கம்பியை தொட்டதால் மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவாரூரில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

திருவாரூர் நேதாஜி நகரில் இருக்கும் ஒரு வீட்டின் மொட்டை மாடியில், நேற்று மாலை சுமார் 20 க்கும் மேற்பட்ட சிறுவர்கள், அங்கு கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருந்தார்கள். 

அப்போது, அங்கு விளைாயடிக்கொண்டிருந்த ஒரு சிறுவன், அடித்த பந்தை மற்றொரு சிறுவன் தாவிப்பிடிக்க முற்பட்டுள்ளார். 

அந்த நேரம் பார்த்து, அந்த மொட்டை மாடியை ஒட்டிச் சென்ற மின் கம்பியில் அந்த சிறுவனின் கை எதிர்பாரத விதமாக பட்டுவிட்டது.

இதனால், மின் கம்பியில் கை பட்ட வேகத்தில், அந்த சிறுவன் மீது மின்சாரம் பாய்ந்து, அப்படியே அந்த மாடியிலிருந்து தூக்கி வீசப்பட்ட அந்த சிறுவன், அடுத்த நொடியே அந்த சிறுவன், துடிதுடித்து கீழே விழுந்தான்.

இதையடுத்து, சிறுவன் விழுந்ததைக் கண்ட அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து, அந்த சிறுவனை காப்பாற்ற முயறன்றார்கள். 

ஆனால், சிறுவனை காப்பாற்ற பொது மக்கள் எவ்வளவோ முயன்றும், அந்த சிறுவன் மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். 

இதனையடுத்து, 108 ஆம்புலன்ஸ்க்கும், போலீசாருக்கும் தெரிய படுத்திய நிலையில், விரைந்து வந்த போலீசார், சிறுவனின் உடலை மீட்டு அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அந்த சிறுவனின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள், அந்த சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதனையடுத்து, சிறுவனின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் தான், வீட்டின் மாடியில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன், மின்கம்பியை தொட்டதால் மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், பார்ப்பவர்களின் நெஞ்சை பததைக்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.