திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் உள்ள மஜீதியா தெருவில் வசித்து வந்தவர் அப்துல்கனி மற்றும் அதே பகுதியில் வசித்து வருபவர் அஷ்ரப் அலி.  உறவினர்களான இருவரும் மலேசியாவில் வேலை பார்த்து வந்துள்ளனர். கொரானாவில் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். இந்த சமயத்தில் அப்துல்கனிக்கும் அவரது அண்ணிக்கும் பழக்கம் ஏற்ப்பட்டுள்ளது.

இந்தப் பழக்கம் நாளடைவில் கள்ளக் காதலாக மலர்ந்து உள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விசயம், பெண்ணின் உறவினரான அஷ்ரப் அலிக்கு தெரிய வந்துள்ளது. 

இதன் காரணமாக அஷ்ரப் அலி மற்றும் அப்துல் கனி ஆகிய இருவருக்கும் வாக்கு வாதம் ஏற்ப்பட்டு உள்ளது. அப்போது, “டேய், அது என்னுடைய அத்தை. அதனால், நீ அவருடனான கள்ளக் காதல் உறவை விட்டு விட வேண்டும்” அவர் பல முறை கூறியும், எச்சரித்தும் வந்திருக்கிறார். ஆனாலும், அப்துல்கனி அதைக் கண்டு கொள்ளாமல் இருவரும் நெருங்கிப் பழகி வந்து உள்ளனர்.

இருவரும் தங்களுக்கு இருக்கும் உறவை துண்டித்துக் கொள்வதாக தெரியவில்லை. இதன் காரணமாக, அஷ்ரப் அலிக்கும் - அப்துல்கனிக்கும் இடையே அடிக்கடி சந்திக்கும் இடங்களில் எல்லாம் தகராறு ஏற்ப்பட்டு சண்டை வந்து உள்ளது. 

ஒரு கட்டத்தில் அப்துல்கனி, அஷ்ரப் அலியை சந்திப்பதை தவிர்க்க கடுப்பாகி அப்துல் கனியை தேடி வந்து உள்ளார். இந்தச் சூழ்நிலையில் கடந்த மாதம் டிசம்பர் 27 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய அப்துல் கனி, தஞ்சை பகுதியில் சுற்றி வந்திருக்கிறார். இந்தச் செய்தியை அறிந்த அஷ்ரப் அலியும், தஞ்சை முழுவதும் அவரை தேடி வந்துள்ளார். 

இந்நிலையில் அதிகாலை 1.30 மணியளவில் தஞ்சை புதிய பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள வாகனம் நிறுத்தும் இடத்தில் தனியாக நின்று கொண்டிருப்பதைக் கவனித்த அஷ்ரப் அலி, உடனடியாக காரில் இருந்து இறங்கி மீண்டும் தன் அத்தையுடன் வைத்திருந்த கள்ளத் தொடர்பை விட்டு விடும் படி கூறியுள்ளார்.

ஆனால், எதையும் கண்டுகொள்ளாத அப்துல் கனிக்கும் - அஷ்ரப் அலிக்கும் தகராறு ஏற்ப்பட்டுள்ளது. 

ஒரு கட்டத்தில் பொருமை தாங்காமல் கோபத்தின் உச்சகட்டத்திற்குச் சென்ற அஷ்ரப் அலி தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பேருந்து நிலையத்திலேயே பொதுமக்கள் முன்பே சாரமாரியாக வெட்டி பலி தீர்த்துள்ளார். 

மேலும், அங்கிருந்து தப்பி ஒட முயர்ச்சிக்கும் போது பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்து காவல் துறையினருடன் ஒப்படைத்துள்ளனர். இது தொடர்பாக தஞ்சை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

அத்துடன், பொது மக்கள் பலர் வந்து போகும் பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்பது போல் சண்டை போடும் போது யாராவது தடுத்திருத்தால் ஒரு வேளை ஒரு உயிர் கொல்லப்படுவதையாவது தடுத்திருக்கலாம். 

பார்ப்போம், இனியாவது பொது மக்கள் விழிப்பார்களா? என்று.. சமீபத்தில் வெளியான ஒரு செய்தியில் கூட கொரானா காலத்தில், கள்ளக் காதல் மற்றும் பாலியல் வன்கொடுமைகள் கூடியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. காலம் கெட்டு விட்டதா, இல்லை காளைகள் கெட்டு விட்டார்களா? என்ற பெரும் கேள்வி எழுந்துள்ளது ஆண்டவனுக்குத் தான் வெளிச்சம்.