தமிழ் தொலைக்காட்சிகளில் முன்னணி தொலைக்காட்சி நிறுவனமாக விளங்கும் விஜய் தொலைக்காட்சியின் மெகா தொடர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் தனி ஆர்வம் உண்டு. அந்த வகையில் தற்போது விஜய் தொலைக்காட்சியின் முன்னணி மெகா தொடராக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளது பாரதி கண்ணம்மா.

பாரதி கண்ணம்மா மெகா தொடரில் கண்ணம்மா எனும் கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் நடிகை ரோஷினி பிரியன். மேலும் பாரதியாக அருண் பிரசாத் நடிக்க, வில்லியாக வெண்பா கதாபாத்திரத்தில் ஃபரீனா ஆசாத் நடித்துள்ளார்.ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமான மெகா தொடராக ஒளிபரப்பாகி வருகிறது பாரதி கண்ணம்மா.

இந்நிலையில் பாரதி கண்ணம்மா மெகா தொடரிலிருந்து நடிகை ரோஷினி ஹரிப்ரியன் விலக உள்ளார் என செய்திகள் பரவி வருகின்றன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இதுவரை வெளிவராத நிலையில், விரைவில் அதற்கான அறிவிப்புகள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக தொலைக்காட்சி தொடர்களில் நடித்த பிரியா பவானி சங்கர் & வாணிபோஜன் ஆகியோர் தற்போது தமிழ் திரையுலகில் கதாநாயகிகளாக நடித்து வரும் நிலையில், ரோஷினி ஹரிப்ரியனும் வெள்ளித்திரையில் கதாநாயகியாக வாய்ப்பு கிடைத்ததால் பாரதிகண்ணம்மா தொடரில் இருந்து விலக உள்ளார் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.