“தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில்  கலைஞர் கருணாநிதி திருத்தம் செய்தது செல்லும்” என்று, சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்து உள்ளது.

மனோன்மணீயம் சுந்தரனார் எழுதிய “தமிழ் தெய்வ வணக்கம்” என்ற பாடலின் ஒரு பகுதியையே தமிழ்நாட்டில் “தமிழ்த்தாய் வாழ்த்து” பாடலாக, பாடப்பட்டு வருகிறது. 

ஆனால், இந்த தமிழ்தாய் வாழ்த்துப்  பாடலை, அண்மையில் தமிழ்நாடு அரசின் மாநிலப் பாடலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். 

ஆனால், இந்த தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடல் மனோன்மணீயம் சுந்தரனார் எழுதிய பாடலின் ஒரு பகுதியே ஆகும். 

அதாவது, கடந்த 1970 ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சராக இருந்த மு.கருணாநிதி, மனோன்மணீயம் சுந்தரனார் எழுதிய இந்த முழுப் பாடலின் சில வரிகளை நீக்கி திருத்தம் செய்திருந்தார். 

அப்படி, அப்போது திருத்தம் செய்யப்பட்ட அந்தப் பாடலே, தற்போது வரை தமிழ்நாட்டில்  “தமிழ்த்தாய் வாழ்த்து பாடலாக” பாடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தான், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை கலைஞர் மு.கருணாநிதி திருத்தம் செய்ததை எதிர்த்து, கடந்த 2007 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்போதே வழக்கு தொடரப்பட்டது. 

அதன்படி, அப்போதைய ஜெபமணி ஜனதா கட்சியின் பொதுச் செயலாளராக மோகன்ராஜ் என்பவர், இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்தார். 

இது தொடர்பான வழக்கு, தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், இது நிலவையில் இருந்து வந்தது.

இந்த நிலையில், “தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில் கலைஞர் மு. கருணாநிதி திருத்தம் செய்தது செல்லும்” என்று, சென்னை உயர் நீதிமன்றம், தற்போது அதிரடியான உத்தரவை பிறப்பித்து உள்ளது.

அந்த வகையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி கேசவேலு ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, “37 ஆண்டுகளுக்குப் பிறகு தொடரப்பட்ட இந்த வழக்கு, ஏற்க முடியாது” என, நீதிபதிகள் தெரிவித்தனர். 

குறிப்பாக, “இந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதிகள், இத்தனை ஆண்டுகள் பாடப்பட்டு வந்த தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலே, இனியும் தமிழ்நாட்டில் தொடர்ந்து பாடப்படும்” என்றும், நீதிபதிகள் அதிரடியாக தீர்ப்பளித்து உத்தரவு பிறப்பித்தனர்.