தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சிவகார்த்திகேயன்.இவர் நடித்த டாக்டர் படம் கடைசியாக திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.இதனை தொடர்ந்து அயலான்,டான் படங்கள் ரிலீசாக உள்ளன.இவற்றை தவிர அனுதீப் இயக்கத்தில் SK 20 படத்தில் நடிக்கவுள்ளார்.

நெல்சன் இயக்கத்தில் உருவான டாக்டர் படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைதிருந்தார்.இந்த படத்தை சிவகார்த்திகேயனின் SK ப்ரொடுக்ஷன்ஸ் மற்றும் KJR ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளனர்.யோகி பாபு,வினய்,டோனி,ஜாரா அர்ச்சனா,வினய்,தீபா உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

பிரியங்கா மோகன் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.இந்த படத்தின் மூலம் இவர் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.இந்த படம் அக்டோபர் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.பலரும் இந்த படத்தினை பாராட்டி வருகின்றனர்.படம் நெடுக காமெடி காட்சிகள் நிறைந்த படமாக டாக்டர் ரசிகர்களை அசத்தி வந்தது.

இந்த படத்தின் சூப்பர்ஹிட் பாடல்களில் ஒன்று சோ பேபி.ரசிகர்களிடம் செம ஹிட் அடித்த இந்த பாடல் வீடியோ யூடியூப்பில் 25 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.இதனை ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.