ரியாலிட்டி நிகழ்ச்சிகள் என்றாலே விஜய் டிவியின் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மீது ரசிகர்களுக்கு எப்போதும் தனி ஆர்வம் உண்டு அதிலும் கடந்த 5 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி பல ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. அந்தவகையில் 106 நாட்கள் நடைபெற்ற பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி சில தினங்களுக்கு முன்பு நிறைவடைந்தது.

கோலாகலமாக நடைபெற்ற பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலியில் டைட்டில் வின்னர் ஆக ராஜு வெற்றி பெற, பிரியங்கா இரண்டாம் இடத்தைப் பிடித்தார். மூன்றாவது இடத்தில் பாவனையும் நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களை அமீர் மற்றும் நிரூப் கைப்பற்றினர்.

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் அதிரடியாக விளையாடிய நிரூப், அனேக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அனைத்து விதமான  டாஸ்க்குளிலும் தனக்கென தனி ஸ்டேட்டர்ஜியை உருவாக்கி சிறப்பாக விளையாடிய நிரூப் இறுதிப்போட்டிக்கு ஒரு வாரத்திற்கு முன்பு நடைபெற்ற டாஸ்க்கில் நேரடியாக இறுதிப் போட்டிக்கு தேர்வாகும் இரண்டாவது நபராக முன்னேறினார்.

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் ஐந்தாவது இடத்தை பிடித்த நிரூப் நமது கலாட்டா சேனலுக்கு சமீபத்தில் அளித்த பிரத்யேக பேட்டியில் அவரது முன்னாள் காதலியும் நெருங்கிய தோழியும் ஆன யாஷிகா ஆனந்த் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார். இருவரும் காதலித்த இனிமையான தருணங்கள் குறித்தும் பிக்பாஸில் யாஷிகா தனக்கு வாய்ப்பு பெற்றுக் கொடுத்ததை குறித்தும் மனம் திறந்து நிரூப் பேசியுள்ள அந்தப் பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணுங்கள்.