நண்பனின் மனைவியுடன் கள்ளக் காதலில் இருந்ததை, நண்பான கணவன் அதனை வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் கோவையில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கோவை சாய்பாபா காலனி அடுத்து உள்ள கே.கே. புதூரை சேர்ந்த 29 வயதான சரவணன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) நபர் ஒருவர்,  காந்திபுரத்தில் உள்ள ஒரு தனியார் பார்சல் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இப்படியான சூழலில், அவர் தனது நண்பரின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்திருக்கிறார். இப்படியாக, அடிக்கடி நண்பனின் வீட்டிற்கு சென்று வந்த தருணத்தில், சரவணனுக்கும் இவரது நண்பரின் மனைவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு உள்ளது. 

இந்த பழக்கமானது, நாளடைவில் அவர்களுக்குள் கள்ளக் காதலாக மாறி இருக்கிறது. 

இதனையடுத்து, வீட்டில் தனது நண்பர் இல்லாத நேரத்தில் அந்த நபர் அங்கு சென்று, தனது நண்பரின் மனைவியுடன் உல்லாசம் அனுபவித்து வந்திருக்கிறார். இப்படியாக, சில மாதங்கள் இந்த கள்ளக் காதல் கதைகள் ஓடியிருக்கின்றன.

ஒரு கட்டத்தில் இந்த  கள்ளக் காதல் விவகாரம் நண்பனும், அந்த பெண்ணின் கணவருமான அந்த நபருக்கு தெரிய வந்திருக்கிறது. இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த நண்பன், தனது நண்பனான சரவணனை அழைத்து கடுமையாக எச்சரித்திருக்கிறார்.

ஆனாலும், அந்த நபர், நண்பனின் மனைவியுடன் இருக்கும் கள்ளக் காதலை கைவிடாமல் தொடர்ந்திருக்கிறார்.

ஆனால், “தனது மனைவியுடன் கள்ளக் காதலை கை விடுமாறு” அவர் பல முறை எச்சரித்ததாக தெரிகிறது. ஆனால், இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் நண்பனின் வீட்டிற்கு அடிக்கடி சென்று, தனது கள்ளக் காதலை தொடர்ந்து வந்ததுடன், அந்த பெண்ணுடன் ஜாலியாக இருந்து வந்திருக்கிறார் சரவணன்.

இப்படியாக, அவர்களது கள்ளக் காதல் தொடர்ந்த நிலையில், சம்பவத்தன்று எப்போதும் போல் நண்பன் வீட்டில் இல்லாத நேரமாக பார்த்து அந்த வீட்டிற்கு வந்த சரவணன், அங்கு தனது நண்பனின் மனைவியுடன் உல்லாசமாக இருந்திருக்கிறார்.

அந்த நேரம் பார்த்து, தனது நண்பர்கள் 6 பேருடன் அங்கு வந்த அந்த பெண்ணின் கணவன், சரவணனை ஆபாசமாக வீடியோ எடுத்து, அவரை தாக்கி, தகாத வார்த்தைகளால் திட்டி அவரிடம் 2 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த சரணவன், அங்குள்ள சாய்பாபா காலனி உள்ள காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்து உள்ளார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், சம்மந்தப்பட்ட பெண்ணின் கணவன் உட்பட, அவரது நண்பர்கள் என மொத்தம் 6 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.