தென்னிந்திய திரை உலகின் பிரபல நடிகர்களில் ஒருவரான ஹரிஷ் உத்தமன் தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளிலும் பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். வில்லன் நடிகராக துணை நடிகராக பல குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வரும் நடிகர் ஹரீஷ் உத்தமனுக்கு தற்போது திருமணம் நடைபெற்றுள்ளது.

தமிழில் இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் வெளிவந்த பிசாசு, இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்த பாண்டிய நாடு, தளபதி விஜய் கதாநாயகனாக நடித்த பைரவா, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த கைதி, ஜெயம் ரவியின் தனி ஒருவன், தனுஷின் தொடரி, விஜய்சேதுபதியின் றெக்க உள்ளிட்ட பல படங்களில் தனது கதாபாத்திரங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் ஹரிஷ் உத்தமன்.

மேலும் மலையாள நடிகர் மம்முட்டி நடிப்பில் வெளிவரவிருக்கும் பீஷ்ம பருவம் மற்றும் நடிகர் சத்யராஜின் தீர்ப்புகள் விற்கப்படும் திரைப்படங்களிலும் ஹரிஷ் உத்தமன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் கேரளாவின் ஆலப்புழாவில் நடிகர் ஹரீஷ் உத்தமன் பிரபல மலையாள நடிகை சின்னு குருவிலாவை பதிவுத் திருமணம் செய்து கொண்டார்.

actor harish uthaman malayalam actress chinnu kuruvila gets married

நடிகை சின்னு குருவிலா மலையாளத்தில் லுக்கா சுப்பி,கஸ்பா மற்றும் நார்த் 24 கதம் உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கோவிட் 19 கட்டுப்பாடுகள் காரணமாக ஹரிஷ் உத்தமன் மற்றும் சின்னு குருவிலா அவர்களின் நெருங்கிய வட்டாரத்தோடு இத்திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களது திருமணத்திற்கு திரையுலகைச் சேர்ந்த பல பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.