கடந்த 10 ஆண்டுகளுக்கான 10 சிறந்த அறிஞர்களுக்கு கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருதுகள் இன்று வழங்கப்படுகின்றன.

அதாவது, மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, முதலமைச்சராக இருந்த போது, தனது சொந்த நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கி, செம்மொழி தமிழாய்வு அறக்கட்டளையை நிறுவினார். 

இந்த செம்மொழி தமிழாய்வு அறக்கட்டளையின் மூலமாக இலக்கியம் ,மொழியியல், படைப்பியல், திறனாய்வு ,மொழிபெயர்ப்பு, தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல்,  நுண்கலைகள் உள்ளிட்டவற்றில் சிறந்த பங்களிப்பை வழங்கி வரும் ஒருவருக்கு ஆண்டு தோறும் கலைஞர் மு. கருணாநிதி செம்மொழி தமிழ் விருது வழங்கப்படும் என்று, அறிவித்தார். 

ஆனால், தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளாக திமுக ஆட்சியில் இல்லாததால், இந்த விருது வழங்கப்பாடல் இருந்து வந்தது.

தற்போது, கடந்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக தற்போது ஆட்சிக்கு வந்துள்ளதால், கடந்த 10 ஆண்டுகளுக்கான 10 அறிஞர்களுக்கு கலைஞர் மு. கருணாநிதி செம்மொழி தமிழ் விருதுக்கு மொத்தம் 10

 பேர் தேர்வாகி உள்ளனர். 

அதன்படி, கடந்த 10 ஆண்டுகளுக்கான 10 சிறந்த அறிஞர்களுக்கு கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருதுகள் இன்று வழங்கப்படுகின்றன.

அந்த வகையில்,  இன்றைய தினம் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் காலை 11 மணிக்கு நடைபெறும் விருது வழங்கும் விழாவில், கருணாநிதி செம்மொழி தமிழ் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 10 அறிஞர்களுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் விருது வழங்கி கவுரவிக்கிறார். 

இந்த விருதுடன் 10 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையுடன் பாராட்டுச் சான்றிதழும், கலைஞர் மு.கருணாநிதியின் உருவச் சிலையும் படைப்பாளர்களுக்கு வழங்கப்படுகின்றன.

1. 2010 ஆம் ஆண்டுக்கு முனைவர் வீ.எஸ். இராஜம்,

2. 2011 ஆம் ஆண்டுக்கு பேராசிரியர் பொன். கோதண்டராமன் (முன்னாள் துணைவேந்தர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை)

3. 2012 ஆம் ஆண்டுக்கு பேராசிரியர் இ. சுந்தரமூர்த்தி ( முன்னாள் துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம்)

4. 2013 ஆம் ஆண்டுக்கு பேராசிரியர் ப. மருதநாயகம் (முன்னாள் இயக்குநர், புதுவை மொழியியல் பண்பாட்டு நிறுவனம், முன்னாள் பதிவாளர், புதுவைப் பல்கலைக்கழகம்)

5. 2014 ஆம் ஆண்டுக்கு பேராசிரியர் கு. மோகனராசு (முன்னாள் பேராசிரியர்& தலைவர், திருக்குறள் ஆய்வு மையம், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை)

6. 2015 ஆம் ஆண்டுக்கு பேராசிரியர். மறைமலை இலக்குவனார் ( முன்னாள் தமிழ்ப் பேராசிரியர், மாநிலக்கல்லூரி)

7. 2016 ஆம் ஆண்டுக்கு பேராசிரியர் கா. ராஜன் ( முன்னாள் பேராசிரியர், வரலாற்றுத் துறை, புதுவைப் பல்கலைக்கழகம்),

8. 2017 ஆம் ஆண்டுக்கு பேராசிரியர் உல்ரிக் நிக்லாஸ், (Professor and Head of the Institute of Indology and Tamil Studies, Cologne University, Germany).

9. 2018 ஆம் ஆண்டுக்கு கவிஞர் ஈரோடு தமிழன்பன் ( முன்னாள் தமிழ்ப் பேராசிரியர், புதுக் கல்லூரி, சென்னை).

10. 2019 ஆம் ஆண்டுக்கு பேராசிரியர் கு.சிவமணி ( முன்னாள் முதல்வர், கரந்தைப் புலவர் கல்லூரி, தஞ்சாவூர் & திருவள்ளுவர் கல்லூரி, நெல்லை)

ஆகியோர், இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கையால் விருது பெறுகிறார்கள்.