மனைவி சொன்னதை கேட்டு முதலிரவை 2 வருடங்கள் தள்ளிப்போட்டு வந்த கணவனுக்கு, மனைவி திருநங்கை என்பது தெரிய வந்ததால் கடும் அதிர்ச்சி அடைந்தார். 

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகில் உள்ள சிறுபாக்கம் கிராமத்தைச் சேர்ந்த செல்வம். வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். 

இதனையடுத்து, அவரது வீட்டில் திருமணத்திற்காகப் பெண் பார்க்கும் படலம் நடந்துள்ளது. இதன் காரணமாக, அவர் வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்குத் திரும்பி உள்ளார்.

அதன் தொடர்ச்சியாக, அங்குள்ள திட்டக்குடி அருகில் இருக்கும் வசிஸ்டபுரம் கிராமத்தைச் சேர்ந்த அசோகன் என்பவரின் மகள் அன்புச்செல்வியை பார்த்து திருமணத்திற்கு நிச்சயம் செய்து உள்ளனர்.

அதன் படி, இவர்களது திருமணம் கடந்த 2013 ஆம் ஆண்டு முறைப்படி நடைபெற்றது. திருமணம் நடைபெற்ற முதலிரவு அன்று, மாப்பிள்ளை செல்வத்திடம் பேசிய மணப்பெண் அன்புச்செல்வி, “நான் தடகள வீராங்கனையாக இருக்கிறேன். அதனால், நான் மேற்படிப்பு படித்து, விளையாட்டு பிரிவில் அரசு வேலை வாங்க வேண்டும். அது வரை நமக்குள் தாம்பத்தியம் எதுவும் வேண்டாம்” என்று, கணவரிடம் முதல் இரவிலேயே கூறியிருக்கிறார்.

இதனைக் கேட்ட கணவன் செல்வம், மனைவி அன்புச்செல்வியின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு அப்படியே மனைவியின் போக்கிலேயே விட்டுள்ளார்.
 
இப்படியே 2 ஆண்டுகள் சென்றிருக்கிறது. அதன் படி, அன்புச்செல்வியும் மேற்படிப்பை முடித்து உள்ளார். 

இதன் தொடர்ச்சியாக, மனைவி சொன்னது படி. திருமணம் முடிந்து 2 ஆண்டுகள் ஆனதால், மனைவியுடன் தாம்பத்தியம் வைத்துக்கொள்ளக் கணவன் செல்வம் முயன்று உள்ளார்.

அப்போது, மனைவி அன்புச்செல்வி திருநங்கை என்பது செல்வத்திற்குத் தெரிய வந்தது. இதனால், கடும் அதிர்ச்சியடைந்த செல்வம், இது குறித்து உடனடியாக அன்புச்செல்வியின் பெற்றோரிடம் நியாயம் கேட்டுள்ளார்.

அப்போது, அவர்கள் தரப்பில் இருந்து செல்வத்தை மிரட்டியதாகத் தெரிகிறது. இதனால், இன்னும் அதிர்ச்சியடைந்த செல்வம், கடந்த 2015 ஆம் ஆண்டு திட்டக்குடி காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், நீதிமன்றத்திகு கொண்டு சென்றனர். இந்த வழக்கு, விருதாச்சலம் கூடுதல் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்த் விசாரித்து வந்தார்.

தற்போது, அன்புச்செல்விக்கு நடந்த மருத்துவ பரிசோதனையில் அன்புச்செல்வி திருநங்கை என்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் செல்வத்தின் மனைவி அன்புச்செல்வி, அவரது பெற்றோர் அசோகன் - செல்லம்மாள் ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி ஆனந்த் உத்தரவிட்டார். இதனையடுத்து, அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இச்சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.