வித்தியாசம் என்ற பெயருக்கு மறுவார்த்தையாக தமிழ் தொலைக்காட்சிகளில் வலம் வருவது விஜய் டிவி.இந்த தொலைக்காட்சியில் வேலைபார்த்த பலரும் தற்போது சினிமாவில் பிரபலன்களாக உள்ளனர்.சிவகார்த்திகேயன்,சந்தானம் போன்ற முக்கிய நடிகர்களை உருவாக்கியது விஜய் டிவி தான்.பல துணை நடிகர்கள்,காமெடி நடிகர்கள்,இயக்குனர்கள் கதாசிரியர்கள் என்று பலரையும் அடையாளம் கண்டுள்ளது விஜய் டிவி.

மேலும் கலக்கப்போவது யாரு,சூப்பர் சிங்கர் உள்ளிட்ட தொடர்களின் மூலம் தமிழகத்தில் மூலை முடுக்கில் இருக்கும் திறமைகளையும் கண்டுபிடிக்க விஜய் டிவி தவறுவதில்லை.பிக்பாஸ்,ஜோடி போன்ற பல ரியாலிட்டி ஷோக்களையும் புதுமையான பல நிகழ்ச்சிகளையும் தற்போது வரை கொடுத்து வருகிறது விஜய் டிவி.விஜய் டிவியின் மற்றுமொரு முக்கிய அம்சம் தொடர்கள்.

விஜய் டிவி பல வெற்றி தொடர்களை தந்து ரசிகர்களிடம் விஜய் டிவி தொடர்களுக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்துள்ளது.தற்போதும் விஜய் டிவியின் தொடர்கள் TRP-யில் கலக்கி வருகின்றன.விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சில தொடர்களின் நேரங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது.

சமீபத்தில் விஜய் டிவியின் ஒளிபரப்பை தொடங்கிய சீரியல்கள் பாவம் கணேசன் மற்றும் காற்றுக்கென்ன வேலி,இந்த தொடர்கள் தற்போது புதிய நேரத்தில் ஒளிபரப்பாக உள்ளன.பாவம் கணேசன் தொடர் இனி மதியம் 1.30க்கும் காற்றுக்கென்ன வேலி தொடர் இனி மாலை 6.30 மணிக்கும் ஒளிபரப்பாகும் என்ற தகவல் கிடைத்துள்ளது.

A post shared by TAMILTVEXPRESS (@tamiltvexpresss)