மகாராஷ்டிராவில் மருமகளின் கள்ளக் காதல் விவகாரம் தெரிந்து கடுப்பான மாமனார், கள்ளக் காதலர்கள் இருவரையும் டிராக்டரை ஏற்றி கொன்ற சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலம் ஜால்னா மாவட்டம் கான்சுவாங்கி தாலுகா சப்பல்காவ் பகுதியில் தான், இப்படி ஒரு கோர சம்பவம் நடந்து உள்ளது. கான்சுவாங்கி தாலுகா சப்பல்காவ் பகுதியைச் சேர்ந்த 32 வயதான மரியா என்ற இளம் பெண், தனது கணவர் மற்றும் மாமியார், மானார் உடன் கூட்டுப் குடும்பமாக வசித்து வந்து உள்ளார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், கடந்த 10 ஆண்டுக்கு முன்பே மரியாவின் கணவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிர் இழந்தார். கணவர் இறக்கும் போது, மரியாவுக்கு அப்போது வெறும் 22 வயது தான் நடந்துகொண்டு இருந்தது. அதன் பிறகு, மரியாளின் பெற்றோர் தனது மகளை அழைத்துக்கொண்டு மற்றொரு திருமணம் செய்து வைக்க வில்லை. இதன் காரணமாக, மரியா கடந்த 10 ஆண்டுகளாக தனது கணவர் வீட்டிலேயே வசித்து வந்தார். அந்த வீட்டில்,  மரியா தனது மாமனார் சம்பத் லால்ஜரே, மாமியார் மற்றும் மைத்துனர் விகாஸ் ஆகியோருடன் வசித்து வந்தார்.

கடந்த 10 ஆண்டுகாலமாக கணவனை இழந்த சிறு வயசான விதவை மரியாவுக்கு, அதே கிராமத்தைச் சேர்ந்த 27 வயதான ஹர்பக் பகவத் என்ற இளைஞருடன் 
காதல் ஏற்பட்டுள்ளது. இதனால், காதலர்கள் அடிக் கடி தனிமையில் சந்தித்து உடல் ரீதியாக உல்லாசம் அனுபவித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த கள்ளக் காதல், சில மாதங்களாக அப்படித் தொடர்ந்து உள்ளது. அவர்கள் இருவரும் அடிக்கடி இப்படியான ஒரு வாழ்க்கையை மிகவும் ரகசியமாக வாழ்ந்து வந்தனர்.

ஒரு கட்டத்தில், மருமகளின் இந்த ரகசிய வாழ்க்கை மாமனார் சம்பத் லால்ஜரேவுக்கு தெரிய வந்துள்ளது. இதனால், கடும் அதிர்ச்சியடைந்த மாமனார், மற்றும் அவரது மகன் விகாஸ் ஆகியோர் சேர்ந்து கள்ளக் காதலர்கள் இருவரையும் அழைத்து கண்டித்தார் உள்ளனர். 

அப்போது, மருமகள் தனது மாமனாரிடம், “எனக்கு அவரை திருமணம் செய்து தாருங்கள்” என்று கேட்டுக்கொண்டதாகத் தெரிகிறது. ஆனால், அதற்கு அவர் மறுத்து விட்டார். இதனால், அதிர்ச்சியடைந்த மாமனார் சம்பத் லால்ஜரே, அவர்கள் இருவருக்கும் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதனால், பயந்துபோன காதலன் ஹர்பக் பகவத், அந்த பகுதியில் உள்ள அம்பாட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி, போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

இப்படிப்பட்ட சூழ்நிலையில், கடந்த மார்ச் மாதம் 30 தேதி, கொரோனா ஊரடங்கிற்கு இடையே, காதலன் ஹர்பக் பகவத்தும், விதவையான இளம் பெண் மரியாவும் ஒன்றாக சேர்ந்து வாழும் பொருட்டு, குஜராத் மாநிலத்திற்கு சென்றனர். ஆனால், “எனது மருமகள் மரியாவை கடத்தி சென்று விட்டதாக” காதலன் ஹர்பக் பகவத் மீது, அவரது மாமனார் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தினர். அதன் படி, கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி குஜராத்தில் பதுங்கி இருந்த காதலன் ஹர்பக் பகவத், இளம் பெண் மரியாவை மீட்டு வந்தனர்.

அதன் பிறகு, அவர்கள் இருவரும் அதே கிராமத்தில் திருமணம் செய்துகொள்ளாமல், தனித் தனியாக வசித்து வந்தனர். இதன் காரணமாக, அந்த காதலர்கள் மீது மாமனார் சம்பத் லால்ஜரேவும், விகாஸ் ஆகிய இருவரும் கடும் ஆத்திரத்திலும் கொலை வெளியிலும் இருந்தனர்.

இந்நிலையில், கடந்த 28 ஆம் தேதி இளம் பெண் மரியா உடன், காதலன் ஹர்பக் பகவத் தனது இருசக்கர வானத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக, புறப்பட்டு சென்றுகொண்டு இருந்தார். அப்போது, அந்த வழியில் டிராக்டர் ஓட்டி வந்த விகாஸ், காதலர்கள் இருவரும் வந்த இருசக்கர வாகனம் மீது வேண்டும் என்றே மோதி உள்ளார். இதில், தூக்கி வீசப்பட்டு மரியா மற்றும் ஹர்பக் பகவத் ஆகிய இருவரும் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர்.

இது தொடர்பாக, அங்கு வந்த அம்பாட் காவல் துறையினர், இதனைக் கொலை வழக்காகப் பதிவு செய்தனர். அத்துடன், கொலை செய்ய பயன்படுத்திய டிராக்டரையும், கொலை செய்த விகாஸ் மற்றும் கொலையில் தொடர்புடைய மாமனார் சம்பத் லால்ஜரேவையும் கைது செய்தனர். இதனால், அந்த பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பும் ஏற்பட்டது.