ஸ்ரீவைகுண்டத்தில் மந்திரவாதி ஒருவர் 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் புதுக்குடி கீழ புளியங்காய் காலனி தெருவைச் சேர்ந்த 55 வயதான சின்னத் துரை, மந்திரவாதியாக அப்பகுதியில் செயல்பட்டு வருகிறார். இவர், தனது வீட்டில் பூஜைகளை செய்து, அப்பகுதியில் உள்ள பொது மக்களுக்கு குறிசொல்லி வந்தார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமி, அங்குள்ள அரசு பள்ளியில் படித்து வந்தார். இந்த சிறுமிக்கு, காலில் திடீரென்று புண்கள் ஏற்பட்டு உள்ளது. 

மேலும், கண் திருஷ்டியை கழிப்பதற்காக சாலையில் போடப்பட்ட பொருட்களை தன் மகள் மிதித்ததால் தான், தன் மகளுக்கு காலில் புண்கள் ஏற்பட்டதாக, சிறுமியின் தாயார் நினைத்து உள்ளார்.

புன்களோடு மகள் அவதிப் பட்டு வந்ததை கவனித்த சிறுமியின் தாயார், தனது மகளை அழைத்துக் கொண்டு மந்திரவாதி சின்னத் துரையின் வீட்டுக்கு சென்று உள்ளார். அங்கு, அவர் தனது மகளுக்கு ஏற்பட்ட புண்களை குணமாக்கும் வகையில் அவளுக்கு கண் திருஷ்டியை கழிப்பதற்கான பூஜைகளை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 

அதன் தொடர்ச்சியாக, பூஜைக்கு தேவையான பொருட்களை வாங்கி வருமாறு சிறுமியின் தாயாரிடம் மந்திரவாதி சின்னத் துரை கூறி இருக்கிறார். உடனடியாக, பாதிக்கப்பட்ட தனது 7 வயது மகளை அங்கேயே விட்டு விட்டு, பூஜை பொருட்கள் வாங்குவதற்காக, சிறுமியின் தயார் கடைக்கு சென்று உள்ளார்.

அந்த நேரம் பார்த்து, தனியாக அந்த அறையில் அமர்ந்திருந்த 7 வயது சிறுமியை, மந்திரவாதி சின்னத் துரை பலவந்தமாக மிரட்டியே பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. 

இதனையடுத்து, சிறுமியின் தயார் பூஜை பொருட்களை வாங்கி விட்டு, மந்திரவாதி சின்னத் துரையின் வீட்டுக்கு வந்து உள்ளார். அதன் தொடர்ச்சியாக,  மந்திரவாதி சின்னத் துரை பூஜை செய்து விட்டு, சிறுமியை அவளது தாயாருடன் வீட்டுக்கு அனுப்பி வைத்து உள்ளார். 

அப்போது, வீட்டுக்கு வந்த பிறகு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட அந்த 7 வயது சிறுமியின் உடல் நலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. அப்போது, “உனக்கு என்ன பண்ணுது?” என்று, சிறுமியின் தயார் கேட்டு உள்ளார். அப்போது, “மந்திரவாதி சின்னத் துரை என்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டான்” என்று, கூறி சிறுமி கதறி அழுதுள்ளார். இதனை கேட்டு கடும் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார், நேராக மந்திரவாதி சின்னத் துரையிடம் சென்று சண்டை போட்டு உள்ளார். அப்போது, “இதனை நீ வெளியில் சொன்னால் மந்திரம் போட்டு உன்னையும், உன் குடும்பத்தையே கொன்று விடுவேன்” என்று, அவர் மிரட்டியதாகத் தெரிகிறது. 

இதனால், பயந்து போன சிறுமியின் தயார், தாயார் தன்னுடைய மகளை அழைத்துக்கொண்டு, கோவையில் தொழிலாளியாக பணியாற்றும் தனது கணவரிடம் சென்று முறையிட்டு உள்ளார். 

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தந்தை, தனது மகளை கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளார். மருத்துவமனையில் சிறுமியை பரிசோதித்த மருத்துவர், “சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை உறுதி” செய்தனர். 

இதனையடுத்து. மகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக, ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறுமியின் தாயார் புகார் அளித்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து, மந்திரவாதி சின்னத் துரையை அதிரடியாக கைது செய்தார்.

இதனிடையே, மந்திரவாதி ஒருவரால் 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம், ஸ்ரீவைகுண்டம் பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பீதியும் ஏற்படுத்தி உள்ளது.