தமிழ் சினிமாவில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அசராமல் நடித்து அசத்தும் சில நடிகர்களில் ஒருவர் சூர்யா.இவர் நடித்திருந்த ஜெய் பீம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக அமேசான் ப்ரைம் OTT தளத்தில் வெளியானது.

இதனை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து வருகிறார் ,இந்த படத்தினை பாண்டிராஜ் இயக்குகிறார்.இந்த படம் பிப்ரவரி 4ஆம் தேதி வெளியாகவுள்ளது.இதனை தொடர்ந்து தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகவுள்ள வாடிவாசல் படத்தில் நடிக்கவுள்ளார்.

ஜெய் பீம் படத்தினை கூட்டத்தில் ஒருவன் இயக்குனர் ஞானவேல் இயக்கியிருந்தார்.இந்த படத்தில் ரஜிஷா விஜயன்,லிஜோமோல் ஜோஸ்,மணிகண்டன்,பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முன்னணி வேடங்களில் நடித்துள்ளனர்.இந்த படம் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.

சூர்யாவின் 2D எண்டெர்டைன்மெண்ட் தயாரிப்பில் உருவான இந்த படத்திற்கு சீன் ரோல்டன் இசையமைத்துள்ளார்.இந்த படம் பல விருதுகளையும்,கௌரவங்களையும் வென்று அசத்தி வருகிறது.தற்போது படம் வெளியாகி சில மாதங்கள் கழித்து இந்த படம் பின்னை இசை அடங்கிய வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.இந்த OST வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்