வேறு பெண்ணுடன் கள்ளக் காதலில் இருந்த கணவன் தலையை வெட்டிய மனைவி, காவல் நிலையத்திற்கு தலையுடன் நடந்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

அதாவது, ஆந்திர மாநிலம் திருப்பதி அடுத்து உள்ள ரேணி குண்டா பகுதியைச் சேர்ந்த 55 வயதான ரவி சந்த்சூரி என்பவர், தனது மனைவி 45 வயதான வசுந்தரா உடன் வசித்து வந்தார்.

இந்த ரவி சந்த்சூரி - வசுந்தரா தம்பதியினருக்கு திருமணமாகி 30 வருடங்கள் ஆகி உள்ள நிலையில், இந்த தம்பதிக்கு ஒரு மகன் இருக்கிறார். ஆனால், இந்த மகனுக்கு சற்று மனநிலை சரியில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தான், கணவன்  ரவி சந்த்சூரிக்கு அந்த பகுதியில் வேறு ஒரு பெண்ணுடன் அறிமுகம் ஏற்பட்டு, அது நாளடைவில் கள்ளக் காதலாக மாறியிருக்கிறது. இதனால், அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில் கணவனின் கள்ளக் காதல் விசயம், மனைவி வசுந்தராவுக்கு தெரிய வந்த நிலையில், கடும் அதிர்ச்சியடைந்த அவர், இது தொடர்பாக தனது கணவரிடம் பேசி, அவரை கண்டித்திருக்கிறார். 

இதன் காரணமாக, கணவன் - மனைவி இடையே அவ்வப்போது பிரச்சனைகள் ஏற்பட்டு இருக்கிறது. அத்துடன், இந்த பிரச்சனை ஒரு கட்டத்தில் அவர்களுக்குள் கைகலப்பக மாறி அடித்துக்கொள்ளும் நிலைக்கு சென்றிருக்கிறது.

கணவன் - மனைவியின் சண்டை சில நாட்கள் இப்படியே சென்ற நிலையில், ஒரு கட்டத்தில் கணவனின் கள்ளக் காதல் தொடர்பாக இருவருக்கும் இடையே மீண்டும் பிரச்சனை ஏற்பட்டு உள்ளது. 

இந்த முறை சண்டையில் கடும் ஆத்திரமடைந்த மனைவி வசுந்திரா, ஒரு கட்டத்திற்கு மேல் தான் என்ன செய்கிறோம் என்பதை மறந்து வீட்டில் இருந்த கத்தியை எடுத்து, தனது கணவனை பலமாக தாக்கி உள்ளார். இதில், அந்த கணவனின் கழுத்தில் கத்தி வெட்டிய நிலையில், அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனையடுத்து, உயிரிழந்த கணவனின் தலையை கையில் எடுத்து ஒரு பையில் போட்டுக்கொண்டு, அங்குள்ள ரேணி குண்டா காவல் நிலையத்திற்கு நடந்து சென்று, அந்த பெண் சரணடைந்தார்.

இப்படியாக, கணவனின் தலையுடன் மனைவி நடந்து வருவதை பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்த போலீசார், கணவனை கொலை செய்த வசுந்தராவிடம் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, “கணவனின் கள்ளத் காதல் கதைகளை கூறி, இதன் காரணமாக எனது கணவனை நான் கொலை செய்தேன்” என்றும், அவர் விளக்கம் அளித்திருக்கிறார்.

அதன் தொடர்ச்சியக, வசுந்தரா மீது கொலை வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, கள்ளக் காதல் காரணமாக கணவனை கொன்றுவிட்டு, மனைவிக்கு கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களுடைய மன நிலை சரியில்லாத மகன், தற்போது யாருமில்லாமல் நிற்கதியாக நிற்பது குறிப்பிடத்தக்கது.