சின்னத்திரை ரசிகர்களின் ஃபேவரட் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் சில தினங்களுக்கு முன்பு வெற்றிகரமாக நிறைவடைந்தது. 106 நாட்கள் நடைபெற்ற பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் மக்களின் மனம் கவர்ந்த போட்டியாளராக ராஜீவ் ஜெயமோகன் பிக் பாஸ் 5 டைட்டில் வின்னர் ஆனார்.

இதனைத் தொடர்ந்து பிக்பாஸ் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் அளிக்கும் விதமாக 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் ULTIMATE நிகழ்ச்சி இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ளது. இதுவரை நடைபெற்ற பிக் பாஸ் சீசன்களில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் மீண்டும் களம் இறங்குவதால் பிக்பாஸ் ULTIMATE மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

முன்னதாக நடைபெற்ற பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் இறுதிப் போட்டியில் கட்டாயம் இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சிபி, பிக்பாஸ் வழங்கிய 12 லட்ச ரூபாயோடு இறுதி போட்டிக்கு சில தினங்கள் இருக்கும் நிலையில் வெளியேறினார். சிபியின் இந்த முடிவு பலருக்கு ஏமாற்றத்தை அளித்தாலும் அனேகமானவர்கள் இந்த முடிவை பாராட்டினர். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின் சிபி நமது கலாட்டா சேனலுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தளபதி விஜய் அவர்களின் குடும்பத்தினர் பிக்பாஸ் நிகழ்ச்சியை ரசித்து பார்ப்பது குறித்து தெரிவித்துள்ளார்.

தளபதி விஜய்யின் நெருங்கிய நண்பரும் நடிகருமான சஞ்சீவ் பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் போட்டியாளராக களமிறங்கினார். அவரிடம் சமீபத்தில் பேசிய சிபி, சஞ்சீவ் கூறியதற்காக தளபதி விஜய்யின் குடும்பத்தினர் பிக்பாஸ் பார்க்க தொடங்கியதாகவும், விஜய்யின் குழந்தைகளுக்கு சிபியை மிகவும் பிடித்ததாக கூறியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தளபதி விஜய் குறித்து சிபி பேசியுள்ள அந்த வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.