ஜாதகம் பார்க்க சென்ற பெண், ஜோதிடருடன் கள்ளக் காதல் உறவில் மூழ்கி அடிக்கடி உல்லாசத்தால் ஈடுபட்டு வந்ததால், பெண்ணின் உறவினர்கள் கல்லால் அடித்தே ஜோதிடரை கொலை செய்த சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அடுத்து உள்ள ஒரிச்சேரி புதூர் மல்லியூர் பகுதியைச் சேர்ந்த பழனிசாமி என்பவர், தனது மனைவி 46 வயதான மல்லிகா உடன் வசித்து வந்தார். இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். 

இப்படியாக, இவர்களது வாழ்க்கை சந்தோசமாக சென்றுக்கொண்டிருந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கணவன் பழனிசாமி எதிர்பாராத விதமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, கணவனை இழந்த 46 வயதான மல்லிகா, தனது இரு பிள்ளைகளையும் வளர்க்க ரொம்பவும் சிரமப்பட்டார். இப்படியான நிலையில், தனது கஷ்டங்கள் தீர, கணவனை இழந்த மல்லிகா, அந்த பகுதியில் இருக்கும் ஜோதிடம் ஒருவரிடம் அடிக்கடி ஜாதகம் பார்க்கச் சென்று உள்ளார். 

அப்போது, அந்த ஜோதிடருக்கும் கணவனை இழந்த மல்லிகாவிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்த பழக்கம், நாளடைவில் அவர்களுக்குள் கள்ளக் காதலாக மாறி உள்ளது.

இதன் காரணமாக, குறிப்பிட்ட அந்த ஜோதிடர், அடிக்கடி மல்லிகா வீட்டிற்கு வந்து தனது காதலி மல்லிகா உடன் உல்லாச இன்பத்தில் ஈடுபட்டுச் செல்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார் என்று கூறப்படுகிறது. இந்த விசயம், மல்லிகாவின் உறவினர்கள் பலருக்கும் தெரிய வந்துள்ளது. இதனால், மல்லிகாவை அவரது உறவினர்கள் கடுமையாகக் கண்டித்து உள்ளனர். ஆனாலும், இதனைப் பற்றியெல்லாம் துளியும் கவலைப்படாத மல்லிகா, தனது கள்ளக் காதலை அந்த ஜோதிடருடன் தொடர்ந்து உள்ளார்.

இதற்கு முடிவு கட்ட நினைத்த மல்லிகாவின் உறவினர்கள், குறிப்பிட்ட அந்த ஜோதிடரை நேற்று பேச்சு வார்த்தைக்கு வருமாறு அழைத்து உள்ளனர். அதன் படி, அவரும் அங்கு வந்திருக்கிறார். 

அப்போது நடைபெற்ற பேச்சு வார்த்தையில், அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக,? மல்லிகாவின் உறவினர்கள் சென்னாநாயக்கர், கோவிந்தன், சூரிய பிரகாஷ், பிரபு, குமார், சின்னம்மாள் ஆகியோர் சேர்ந்து அந்த ஜோதிடரை கடுமையாகத் தாக்கி உள்ளனர். இதில், தாக்குதலுக்கு ஆளான அந்த ஜோதிடம், அருகில் கிடந்த கத்தியை எடுத்து அவர்கள் அனைவரையும் கத்தியால் சரமாரியாகக் குத்தி உள்ளார்.

இதனால், இன்னும் கோபம் அடைந்த மல்லிகாவின் உறவினர்கள் 6 பேரும் சேர்ந்து, அந்த ஜோதிடரை கல்லால் அடித்துத் தாக்கி உள்ளனர். இதில், ரத்த வெள்ளத்தில் படுகாயங்களோடு அங்கே சரிந்து விழுந்த அந்த ஜோதிடர், அங்கேயே உயிரிழந்தார். இது குறித்து, அந்த பகுதியில் உள்ள போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

அந்த சம்பவம் குறித்து விரைந்து வந்த போலீசார் காயமடைந்த 6 பேரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன், உயிரிழந்த ஜோதிடரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகப் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அப்பகுதியில் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.