12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், தனது முன்னாள் காதலனை கொலை செய்ய கூலிப்படையை ஏவிவிட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில், அதுவும் நெல்லை மாவட்டத்தில் தான் இப்படி ஒரு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் களக்காடு அடுத்து உள்ள பணக்குடி புஷ்பவனம் கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். அந்த மாணவி, அங்குள்ள அரசுப் பள்ளியில் தற்போது 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். 

அதே போல், அந்த பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவர் விக்னேஷ், தன்னுடன் படித்து வந்த குறிப்பிட்ட அந்த மாணவியை காதலித்து வந்து உள்ளார். இப்படியாக, இருவரும் அந்த மாணவியும், அந்த மாணவனும் ஒருவரை ஒருவர் காதலித்த நிலையில், இருவரும் நெருக்கமாகப் பழகி வந்தனர்.

இப்படியான நிலையில், அந்த மாணவி திடீரென விக்னேஷை பிரிந்து சென்று, வேறு ஒரு மாணவனை காதலித்து வந்துள்ளார் என்று கூறப்படுகிறது. புதிதாக வேறு ஒரு மாணவனை அந்த மாணவி காதலித்த காரணத்திற்காக, விக்னேஷுடனும் அவர் பேசாமல் தவிர்த்து வந்தார். 

காதலியின் இந்த செயல் கண்டு கடும் அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்த மாணவன் விக்னேஷ், குறிப்பிட்ட அ்நத மாணவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைக் காட்டி, அவரை மிரட்டிவிட்டு, “உன் வீட்டிலும் இது பற்றி சொல்லி விடுவேன்” என்று, கூறி மிரட்டி இருக்கிறார்.

இதனை சற்றும் எதிர்பார்க்காத அந்த மாணவி, சற்று யோசித்து தனது முன்னாள் காதலன் விக்னேஷை, கொலை செய்ய முடிவு செய்தார். இதனையடுத்து, அந்த மாணவி, அந்த பகுதியில் உள்ள கூலிப்படையினர் உதவியை நாடியிருக்கிறார். 

அதன் படி, கூலிப்படையினர் சொன்னது படி, முன்னாள் காதலன் விக்னேஷை அங்குள்ள பெத்தானியா மலைப்பகுதிக்கு வரவழைத்திருக்கிறார் அந்த மாணவி. அதனை குறிப்பிட்ட அந்த இடத்திற்கு வந்த விக்னேஷை, கூலிப்படையை ஏவிவிட்டு கொலை செய்ய முயன்று உள்ளனர். அதன்படி வெடிகுண்டு, அரிவாள், கத்தி உள்ளிட்ட பொருட்களை காட்டி கூலிப்படையினர் விக்னேஷை மிரட்டி உள்ளனர்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த மாணவன் விக்னேஷ், அங்கிருந்து எப்படியோ தப்பித்து ஓடிவந்த விக்னேஷ், அங்குள்ள காவல் நிலையத்தில், தனது முன்னாள் காதலியான அந்த மாணவி மீது புகார் அளித்து உள்ளார். 

“12 ஆம் வகுப்பு அந்த மாணவி, கூலிப்படையை ஏவி என்னை கொலை செய்ய முயல்வதாக” புகார் அளித்து உள்ளார். அந்தப் புகாரின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், மலைப்பகுதியில் பதுங்கியிருந்த கூலிப்படையினர் 4 பேரை அதிரடியாக கைது செய்து தீவிராமாக விசாரணை நடத்தினர். இதில், அந்த 12 ஆம் வகுப்பு மாணவி, கூலிப்படையை ஏவிவிட்டு முன்னாள் காதலனை கொலை செய்ய திட்டமிட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது. 

இதனையடுத்து, அந்த கூலிப்படையினரை போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். அத்துடன், இந்த வழக்கில் தற்போது தலைமறைவாக இருக்கும் 12 ஆம் வகுப்பு மாணவி  மற்றும் அவரது நண்பர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.