இளம் ஹீரோவுடன் ஜோடி சேரும் வாணி போஜன் !
By Aravind Selvam | Galatta | April 11, 2021 17:09 PM IST
சன் டிவியில் ஒளிபரப்பாகி பெரிய ஹிட் அடித்திருந்த தொடர் தெய்வமகள்.விகடன் டெலிவிஸ்டாஸ் தயாரிப்பில் உருவான இந்த தொடர் 2013 மார்ச் முதல் 2018 பிப்ரவரி வரை கிட்டத்தட்ட 5 வருடங்கள் ஒளிபரப்பானது.1400க்கும் மேற்பட்ட எபிசோடுகள் ஒளிபரப்பான இந்த தொடருக்கென்று பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.
இந்த தொடரில் கிருஷ்ணா ஹீரோவாக நடித்திருந்தார்.ரேகா கிருஷ்ணப்பா இந்த தொடரின் முக்கிய வில்லியாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தார்.அண்ணியார் என்று ரசிகர்களால் தனது கதாபாத்திரத்தின் பெயராலேயே பலராலும் அழைக்கப்பட்டார்.மேலும் பல நட்சத்திரங்கள் இந்த தொடரில் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.
இந்த தொடரின் ஹீரோயினாக அறிமுகமானவர் வாணி போஜன்.இந்த தொடரின் மூலம் பெண்கள் மற்றும் இளைஞர்களின் இதயத்துடிப்பாக மாறியவர் வாணி போஜன்.இந்த தொடரின் மூலம் கனவுக்கன்னியாக மாறினார் வணிபோஜன்.இதற்கு தொடர்ந்து சில முன்னணி தொடர்களில் நடித்து அசத்தியிருந்தார் வாணி போஜன்.
இதற்கு பிறகு சில படங்களில் நடித்து தனது சினிமா கனவை நனவாகினார் வாணி போஜன்.ஓ மை கடவுளே,லாக்கப் உள்ளிட்ட படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.மேலும் சீயான் 60,தாழ் திறவா,பகைவனுக்கு அருள்வாய் உள்ளிட்ட சில முக்கிய படங்களில் தற்போது ஹீரோயினாக நடித்து வருகிறார்.இவரது ட்ரிப்பிள்ஸ் வெப் சீரிஸ் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
தற்போது இவர் ஹீரோயினாக நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.Axess Film Factory தயாரிப்பில் உருவாகவுள்ள இந்த படத்தில் பரத் ஹீரோவாக நடிக்கவுள்ளார்,இவருக்கு ஜோடியாக வாணி போஜன் நடிக்கவுள்ளார்.இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது.இந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றன.
Excited to share our next #Productionno12 @bharathhere @vanibhojanoffl @rajNKPK #Kavya. A Slasher Thriller Film.@Dili_AFF @nameissakthi @sureshbala @ManiLallu @kalaivananoffl @Sethu_Cine & @itspooranesh@Duraikv @decteamworks1 @R_chandru @DoneChannel1 pic.twitter.com/dp80Br7rTa
— Axess film factory (@AxessFilm) April 11, 2021
Super exciting update on Vishal - Arya's Enemy - Producer makes fans happy!
10/04/2021 06:26 PM
Leela Samson onboard for this star actor's comeback film - big announcement!
10/04/2021 05:00 PM