சித்தப்பாவின் பாலியல் இச்சையால் பலாத்காரம் செய்யப்பட்ட 10 ஆம் வகுப்பு சிறுமி, 3 மாத கர்ப்பமான நிலையில், சிறுமியின் காதலன் மற்றும் சித்தி கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

தமிழகத்தில் திருச்செங்கோட்டை பகுதியில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

திருச்செங்கோட்டை அடுத்து இருக்கும் வாய்கால் தோட்டம் பகுதியை சேர்ந்த 34 வயதான புவனேஸ்வரன், தனது மனைவியுடன் வசித்து வருகிறார். ஆனால், புவனேஸ்வரன் மனைவியின் சகோதரி ஒருவர் ஈரோட்டில் தனது கணவருடன் வசித்து வந்தார். 

இப்படியான நிலையில், மனைவியின் சகோதரிக்கும் - அவரது கணவருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு எழுந்துகொண்டே இருந்ததால், ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமை இழந்த மனைவியின் சடீகாதரி, கருத்து வேறுபாடு காரணமாகத் தனது கணவரை பிரிந்து சென்று விட்டார்.

இதனையடுத்து, வேறு ஒருவரை அவர் 2 வதாக திருமணம் செய்து கொண்டு, ஈரோட்டில் தனது 2 வது கணவருடன் வசித்து வந்தார். இவர்களுக்குப் பள்ளியில் படிக்கும் வயதில் ஒரு மகள் இருக்கிறார்.

இப்படியான நிலையில், இவரது மகள் அதே பகுதியைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவனை அவர் காதலித்து வந்து உள்ளார். இதனால், அந்த இளைஞனுடன், அந்த சிறுமி தினந்தோறும் மணிக்கணக்கில் பேசிக்கொண்டு இருந்து உள்ளார். இதனை கவனித்த அப்பகுதி மக்கள் சிலர், இந்த விசயத்தை, சிறுமியின் தாயாரிடம் கூறி உள்ளனர்.

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார், தனது மகளை அழைத்து இது குறித்து கேட்டு உள்ளார். அப்போது, அந்த 12 ஆம் வகுப்பு மாணவனைக் காதலிப்பதாக மகள் கூறி உள்ளார். இதனைக் கேட்டு இன்னும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார், தனது மகளை திருச்செங்கோடு செங்கோடம் பாளையம் வாய்க்கால் தோட்டத்தில் வசிக்கும் தனது சகோதரி வீட்டிற்கு அனுப்பி வைத்து உள்ளார்.

இதனால், கடந்த இரண்டு வருடமாக அந்த சிறுமி தனது சித்தி வீட்டில் தங்கி, அந்த பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் தற்போது 10 ஆம் வகுப்பு படித்து வந்தார். அப்போது, அந்த வீட்டில் கடந்த 2 ஆண்டுகளாக சிறுமி வசித்து வந்த நிலையில், சிறுமிக்கும் அவரது சித்தப்பா புவனேஸ்வரனுக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தான், கடந்த சில தினங்களுக்கு முன்பு வயிறு வலிப்பதாக சிறுமி தனது சித்தியிடம் கூறி உள்ளார். இதனையடுத்து, அந்த சிறுமியை, அவர்  தனது கணவன் புவனேஸ்வரனுடன் சேர்ந்து அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உள்ளார். 

மருத்துவமனையில் சிறுமியை பரிசோதித்த மருத்துவர், “சிறுமி தற்போது 3 மாத கர்ப்பிணியாக இருப்பதாக” கூறியுள்ளார்.

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் சித்தி, இது குறித்து சிறுமியிடம் விசாரித்து உள்ளார். அப்போது, சிறுமி எதுவும் சரிவரக் கூறவில்லை என்று கூறப்படுகிறது.

அதன் தொடர்ச்சியாக, “சிறுமிக்கு கரு கலைப்பு செய்யும் படி” மருத்துவர்களிடம் சிறுமியின் சித்தி கூறி உள்ளார். ஆனால், “சட்ட விரோதமாகக் கருக்கலைப்பு செய்ய மறுத்த” மருத்துவர், இது தொடர்பாக மாவட்ட குழந்தைகள் நல அமைப்பில் புகார் அளித்து உள்ளார்.

இது தொடர்பாக திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு, குழந்தைகள் நல அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். இது தொடர்பாக விரைந்து வந்த அதிகாரிகள் மற்றும் போலீசார், சிறுமியிடம் விசாரித்து உள்ளனர்.

அப்போது, “தனது கர்ப்பத்திற்கு காரணமான சித்தப்பா புவனேஸ்வரன் பற்றியும், அவரது செல்யாபடுகள் பற்றியும், அவரின் ஆசை வார்த்தைகள்” பற்றியும் கூறி, சிறுமி அழுதிருக்கிறார்.

இதனையடுத்து, சிறுமியின் சித்தப்பா புவனேஸ்வரன் மீது மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த மகளிர் காவல் நிலைய போலீசார், அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, சித்தி வீட்டில் இருந்த சிறுமிக்கும் சித்தப்பாவுக்கும் இடையே ஏற்பட்ட திருமணத்தை மீறிய உறவால், 10 ஆம் வகுப்பு சிறுமி கர்ப்பமான சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.