4 கல்யாணம், 3 கள்ளக் காதல் தொடர்பில் இருந்த 40 வயது பெண்ணுக்காக அடித்துக்கொண்ட கள்ளக் காதலர்களில், கள்ளக் காதலனாக இருந்த 17 வயது சிறுவன் ஒருவன், சக கள்ளக் காதலனை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள புதூர் பள்ளிக் கூடம் பகுதியை சேர்ந்த 36 வயதான செல்லவேல், என்பவர் லாரி டிரைவராக இருக்கிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆக வில்லை. 

இப்படியான சூழலில் தான், மேட்டூர் தங்கமாபுரிபட்டணம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் 40 வயதான மனைவி அழகம்மாள் என்ற பெண்ணுடன், செல்லவேலுக்கு கடந்த ஓராண்டுக்கு முன்பாக அறிமுகம் ஏற்பட்டு, இது நாளடைவில் பழக்கமாக மாறியிருக்கிறது.

அதன் தொடர்ச்சியாக, செல்லவேலுக்கும் - அழகம்மாளுக்கும் கள்ளக் காதலாக மாறியிருக்கிறது.

அத்துடன், கணவரை பிரிந்த வாழ்ந்து வந்த 40 வயதான அழகம்மாள், கடந்த 6 மாதத்திற்கு முன்பு, செல்லவேலுவுடன் ஒரே வீட்டில் தங்கி குடும்பம் நடத்தி வந்திருக்கிறார்.

இப்படியான சூழலில் தான், கடந்த 7 ஆம் தேதி இரவு செல்லவேல் தனது இருசக்கர வாகனத்தில் சென்ற போது, அங்குள்ள மேல் காவிரி கிராஸ் பகுதியில் மேற்கு கரை கால்வாய் அருகே அவர் கத்தியால் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

இதனையடுத்து, அங்கு விரைந்து வந்த போலீசார், சடலத்தை மீட்டு இது குறித்து வழக்குப் பதிவு செய்து, போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அதன்படி, இந்த கொலை குறித்து செல்லவேலின் கள்ளக் காதலியான அழகம்மாளிடம் போலீசார் தங்களது பாணியில் தீவிரமாக விசாரணை நடத்தி உள்ளனர். இதில் தான், பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அதாவது, 40 வயதான அழகம்மாளுக்கு ஏற்கனவே சரவணன், வேலு, ஆறுமுகம், விக்கி என்ற 4 பேருடன் அடுத்தடுத்து திருமணம் ஆகியிருப்பது தெரிய வந்திருக்கிறது.

முக்கியமாக, சரவணன் உடன் கல்யாணம் ஆகி அவரக்கு 3 குழந்தைகள் பிறந்து உள்ளனர். ஆனாலும், அவரை விட்டு பிரிந்து தொடர்ச்சியாக 4 கல்யாணம் செய்துகொண்ட நிலையில், கடைசியாக விக்கியுடன் அந்த பெண் குடும்பம் நடத்தி வந்திருக்கிறார்.

அப்போது தான், அழகம்மாளுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு செல்லவேலுவுடன் ஏற்பட்ட பழக்கம் காரணமாக, 4 வது கணவன் விக்கியையும் பிரிந்து, கள்ளக் காதலன் செல்லவேலுவுடன் ஒரே வீட்டில் ஒன்றாக குடும்பம் நடத்தி வந்திருக்கிறார்.

அந்த நேரத்தில், செல்லவேலு ஓட்டி வந்த லாரியில் கிளீனராக மேட்டூர் அருகே உள்ள குண்டுகல்லூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன், பணியாற்றி வந்திருக்கிறார்.

அப்போது, செல்லவேலுவுடன் அந்த வீட்டிற்கு வந்து செல்லுகையில், அழகம்மாளுடன் அந்த 17 வயது சிறுவனுக்கும் கள்ளக் காதல் ஏற்பட்டு, அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.

இப்படியாக, தீபாவளிக்கு முதல் நாள் அழகம்மாள், அந்த 17 வயது சிறுவனுடன் படுக்கையறையில் ஒன்றாக இருந்ததை, கள்ளக் காதலன் செல்லவேல் நேரில் பார்த்திருக்கிறார். இதனையடுத்து, தனது லாரி கிளீனரையும், தனது கள்ளக் காதலியையும் அவர் கடுமையாகக் கண்டித்து இருக்கிறார். 

அத்துடன், அந்த சிறுவனிடம் “உனது பெற்றோரிடம் சொல்லி விடுவேன்” என்றும், அவர் மிரட்டி இருக்கிறார்.

இதனால், பயந்து போன அந்த 17 வயது சிறுவன், “ஓனர் செல்லவேல் தன்னை ஏதாவது செய்து விடுவாரோ?” என்று, பயந்துபோய்  செல்லவேலை ரகசியமாக நோட்ட மிட்டு வந்திருக்கிறான் அந்த சிறுவன். 

அப்படிதான், செல்லவேல் தனியாக செல்லும் போது, அவரை பின்தொடர்ந்து வந்து அவரை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு, அங்கிருந்து தப்பித்து சென்றிருக்கிறான் அந்த 17 வயது சிறுவன்.

இதனையடுத்து, கள்ளக் காதல் போட்டியில் 40 பெண்ணுக்காகத் தனது ஓனரை கொலை செய்த அந்த 17 வயது சிறுவனை சுற்றி வலைத்து பிடித்த போலீசார், அந்த சிறுவனை சேலத்தில் இருக்கும் கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனர்.

முக்கியமாக, இந்த கொலையில் மேலும் யாருக்கேனும் தொடர்பு இருக்கலாம் என்றும், போலீசார் புதிதாக சந்தேகிக்கின்றனர். 

இதன் காரணமாக, அந்த சிறுவனின் செல்போனை பறிமுதல் செய்து, அதில் இருக்கும் தகவல்களின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், இந்த கொலை வழக்கில், இன்னும் சிலர் கைதாகலாம் என்றும் கூறப்படுகிறது. இச்சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.