தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் கார்த்தி, இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்ட படைப்பாக தயாராகியிருக்கும் பொன்னியன் செல்வன் திரைப்படத்தில் வல்லவரையன் வந்தியத்தேவன் என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தொடர்ந்து இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகும் சர்தார் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வரும் நடிகர் கார்த்தி , தற்போது கொம்பன் பட இயக்குனர் முத்தையா இயக்கத்தில் உருவாகும் விருமன் திரைப்படத்திலும் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தில் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரிக்கப்படும் விருமன் திரைப்படத்தில் நடிகர்கள் பிரகாஷ்ராஜ் ராஜ்கிரண், சூரி ஆகியோர் நடிக்க, செல்வக்குமார்.எஸ்.கே ஒளிப்பதிவில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். விருமன் படத்தின் படப்பிடிப்பு தற்போது மதுரையில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் நடிகர் கார்த்தி விருமன் படத்தில் தனது கதாபாத்திரம் குறித்த ருசிகர தகவலை பகிர்ந்துகொண்டார்.கார்த்தி அவ்வப்போது தனது ரசிகர்களை நேரில் சந்திப்பது வழக்கம். அந்த வகையில் மதுரையில் தனது ரசிகர்களை சந்தித்த நடிகர் கார்த்தி அந்த சந்திப்பின் பொழுது விருமன் படத்தில் தனது கதாபாத்திரம் "தர லோக்கலாக" இருக்கும் என தெரிவித்துள்ளார்.