திருமண ஆசை வார்த்தை கூறி, கல்லூரி மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை போலீசார் அதிரடியாகக் கைது செய்து உள்ளனர். 

திருச்சி அடுத்து உள்ள தாரமங்கலம் அருகில் உள்ள தெசவிளக்கு பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர், சேலம் கோரிமேட்டில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். 

இந்த மாணவியை, அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடாசலம் என்பவரின் மகன் 19 வயதான இளங்கோவன், காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

அத்துடன், அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர் என்றும், இருவரும் காதலர்களாக அப்பகுதியின் பல இடங்களுக்கும் சென்று வந்தனர் என்றும் கூறப்படுகிறது.

இப்படியான நிலையில், அந்த 17 வயது கல்லூரி மாணவியை, திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி, 19 வயதான இளங்கோவன் கடத்திச் 
சென்று விட்டதாகத் தெரிகிறது.

மகளை காணவில்லை என்று, அந்த மாணவியின் பெற்றோர், பல இடங்களில் தேடிப் பார்த்து உள்ளனர். ஆனால், எங்குத் தேடியும் மாணவி கிடைக்கவில்லை. 

அத்துடன், தங்களது மகளை இளங்கோவன் கடத்திச் சென்றுவிட்டதாக, அந்த மாணவியின் பெற்றோருக்குத் தகவல் கிடைத்து உள்ளது.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர்கள், தாரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், மாயமான மாணவியையும், கடத்திச் சென்ற இளங்கோவனையும் தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்த நிலையில், இளங்கோவன் மறைந்து இருக்கும் இடம் போலீசாருக்கு தெரிய வந்தது. இதனையடுத்து, அங்கு விரைந்து சென்ற போலீசார், மாணவியைப் பத்திரமாக மீட்டனர்.

அத்துடன், இளங்கோவனையும் போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து தீவிரமாக விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய விசாரணையில், “திருமணம் செய்து கொள்வதாக அந்த கல்லூரி மாணவியிடம் ஆசை ஆசையான வார்த்தைகளைக் கூறி, கடத்திச் சென்ற அந்த கல்லூரி மாணவியை அவர் பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. 

இதனையடுத்து, காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, இளங்கோவனை கைது செய்தனர். 

மேலும், மாணவியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, அவரது பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர். 

இதனிடையே, திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி, கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை போலீசார் 
அதிரடியாக போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து உள்ள சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.