அன்றும் இன்றும் என்றும் திரை உலகின் சூப்பர் ஸ்டாராக ஜனங்களின் மனதில் நிறைந்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு நடந்து முடிந்த 67ஆவது இந்திய திரைப்பட தேசிய விருது விழாவில் திரைத்துறையின் உயரிய விருதான தாதா சாஹேப் பால்கே விருது வழங்கப்பட்டது. இதனையடுத்து நாளை (நவம்பர் 4) தீபாவளி சரவெடியாக சூப்பர் ஸ்டாரின் அண்ணாத்த திரைப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், தமிழ் சினிமாவின் முன்னணி கமர்சியல் இயக்குனர் சிவா முதல் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை இயக்கும் அண்ணாத்த திரைப்படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ், ரெட்டின் கிங்ஸ்லி, சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் டி.இமான் இசையில் வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ள அதிரடி ஆக்சன் திரைப்படமான அண்ணாத்த படத்திற்கு திலிப் சுப்புராயன் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றியுள்ளார். முன்னதாக வெளிவந்த அண்ணாத்த டீசர் & டிரைலர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அண்ணாத்த படத்தில் சூப்பர் ஸ்டாரின் ஓபனிங் பாடலான அண்ணாத்த அண்ணாத்த பாடலின் புதிய ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. சூப்பர் ஸ்டாரின் ஸ்டைலான அண்ணாத்த பாடல் ப்ரோமோ வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணுங்கள்.