தமிழக அரசு வன்னியர் இட ஒதுக்கீடு ரத்துத்கு  எதிராக மேல்முறையீடு செய்யும் அமைச்சர்  பொன்முடி 


வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் என்றும் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை பல்கலைக்கழகங்களில் அமல்படுத்துவோம் என்றும் பொன்முடி கூறினார்.

ponmudi

வன்னியர்களுக்கான 10.5 சதவீகிதம் உள் ஒதுக்கீடு ரத்து செய்து மதுரை உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. இச்சட்டத்தை ரத்து செய்ய கோரி 25 மேலான வழக்குகள்  தாக்கல் செய்யப்பட்டன. உயர் நீதி மன்ற தலைமை நீதிபதி உத்தரவின் அடிப்படையில் நீதிபதிகள் துரைசாமி , முரளிசங்கர் அமர்வு இவ்வழக்கை விசாரித்தது.

பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் வன்னியர்களும் இருந்தனர் ஆனால் வன்னியர்கள் தங்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கிட  வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் போராட்டம் செய்தனர். கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பின் தங்கிய வகுப்பினருக்கான 20 % இட ஒதுக்கீட்டில்  வன்னியர்களுக்கு 10.5% கடந்த ஆட்சியில் வழங்கி தமிழக சட்டமனறத்தில் பிப்ரவரி 26ம் தேதி சட்டம் இயறட்பட்டது.

சாதிவாரி கணக்கெடுப்பை முடிக்காமல் இச்சட்டம் இயற்ப்பட்டுள்ளது  பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ள இதர சாதியினர் கடுமையாக பாதிக்கப்படுவதாக பல எதிர்ப்புகள் கிளம்பியது.இதனை அடுத்து இட ஒதுக்கீடு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன. இவ்வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் இது தொடர்பாக மாநில ஐகோர்ட் அணுகுமாறு தெரிவித்தன எனவே இதனை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என வாதிடப்பட்டது.

வாதங்களை பகுப்பாய்ந்ததில், அரசு தனது சட்ட எல்லையை மீறி வன்னியர்களுக்கான 10.5% உள் இட ஒதுக்கீட்டை வழங்கியுள்ளது. அரசுத்தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கங்கள் போதுமானதாக இல்லை எனக்கூறி, வன்னியர்களுக்கு10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கிய சட்டத்தை ரத்து செய்து தீர்ப்பளித்தனர்.

இதனை அடுத்து  சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி, 10.5 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக தமிழ்நாடு அரசு மேல்முறையீட்டிற்கு செல்கிறது எனவும், நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை பல்கலைக்கழகங்களில் அமல்படுத்துவோம் எனவும் தெரிவித்தார்.