ஜீன்ஸ் அணிந்து வரும் பெண்களுக்கு கடையில் அனுமதி இல்லை மற்றும் பொருட்களும் விற்பனையும் இல்லை என்று கடைக்காரர் கூறியதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அசாம் மாநிலத்தில் தான் இப்படி ஒரு பரபரப்பு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

“இந்தியா பாரம்பரியம் மிக்க கலாச்சாரம் கொண்ட நாடு!”

இது ஒரு பக்கம் இருந்தாலும், “பழைய பஞ்சாங்க பாரம்பரியம் எல்லாம், இந்த நவீன காலத்தில் உதவாது” என்ற புதிய முறைகளை இந்த காலத்து இளம் பெண்கள் கையெழுத்து டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூர் போன்ற நகரங்களில் வீர நடை போட்டுக்கொண்டு இருக்கிறார்கள். 

இன்னும் சில பெண்கள் சுதந்திரம் என்ற பெயரில் எல்லை மீறுவதும் நடக்கவே செய்கின்றன. அதனைப் பார்க்கும் பலரும் பொத்தம் பொதுவாக, எல்லா பெண்கள் மீதும், அந்த கோபத்தை காட்டி விடுகிறார்கள். அப்படியான ஒரு சம்பவம் தான் தற்போது அசாம் மாநிலத்தில் நடந்திருக்கிறது.

அசாம் மாநிலத்தில் சரியாளி என்ற பகுதியில் நூருல் ஆமின் என்பவர் செல்போன் கடை ஒன்றை நடத்தி வருகிறார். 

இவரது கடைக்கு பெண் வாடிக்கையாளர் ஒருவர், ஜீன்ஸ் அணிந்துக்கொண்டு மிகவும் மாடலான ஆடை அணிந்துகொண்டு அந்த கடைக்குள் சென்று, செல்போன் குறித்த விவரங்களை கேட்டிருக்கிறார். ஆனால், அதற்கு அந்த கடைக்காரர் சரியான பதில் எதுவும் கூறாமல், “முதலில் கடையை விட்டு வெளியேறு” என்று, ஒருமையில் பேசி சத்தம் போட்டதாக தெரிகிறது.

அதற்கு அந்த பெண், “நான் செல்போன் வாங்குவதற்காகத்தான்  இங்கு வந்தேன்.  என்னை ஏன் வெளியேறச் சொல்லுகிறீர்கள்?” என்று, எதிர் கேள்வியை அந்த கேட்டிருக்கிறார். 

அதற்கு அவர், “ஜீன்ஸ் போட்டு வரும் பெண்களுக்கு நான் பொருட்களை விற்பனை செய்வதில்லை.  என் கடைக்குள் வருவதற்கும் அப்படிப்பட்ட பெண்களுக்கு அனுமதியும் இல்லை,  முதலில் வெளியே  போ” என்று கூறி, அவர் மீண்டும் சத்தமாக பேசியிருக்கிறார். 

இதனால், கடும் அதிர்ச்சி அடைந்த  அந்த பெண்,  தனது வீட்டிற்கு திரும்பிய நிலயைில், இது குறித்து தனது தந்தையிடம் கூறியிருக்கிறார்.

இதனைக் கேட்டு சற்று கோபம் அடைந்த அவர், தனது மகளை அழைத்துக் கொண்டு மீண்டும் அந்த செல்போன் கடைக்குச் சென்றிருக்கிறார்.

அங்கு, கடைக்காரர் நூருல் ஆமினிடம், “ஜீன்ஸ் அணிந்து வந்ததால் கடைக்குள் அனுமதி இல்லை. பொருட்களும் விற்பனைக்கு இல்லை என்று ஏன் சத்தம் போடுகிறீர்கள்?” என்று, நியாம் கேட்டிருக்கிறார். 

அதற்கு அந்த கடைக்காரர், “நாங்கள் அப்படித்தான் செய்வோம்.  இது எங்கள் கடை, எங்கள் பொருள், எங்கள் விருப்பம்” என்று, சொல்லி சத்தம் போட்டிருக்கிறார்.

ஆனால், இதனைக் கேட்ட அந்த பெண்ணின் தந்தை, “இது, சட்டப்படி தவறு” என்று, வாதம் செய்திருக்கிறார். இதனால், இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.  

இதனையடுத்து, அந்த பகுதியில் கடை வைத்து நடத்தியவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து கொண்டு, அந்தப் பெண்ணின் தந்தை கடுமையாகத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இதனால், அதிர்ச்சியடைந்த அந்த நபர், பாதிக்கப்பட்ட தனது மகளுடன் சென்று அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், சம்மந்தப்பட்ட கடை காரரை கைது செய்து விசாரணைக்கு மேற்கொண்டு வருகிறார்கள்.

இதனிடையே, ஜீன்ஸ் அணிந்து வரும் பெண்களுக்கு கடையில் அனுமதி இல்லை மற்றும் பொருட்களும் விற்பனையும் இல்லை என்று கடைக்காரர் கூறிய சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.