தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களில் ஒருவரான நடிகர் சூர்யா நடிப்பில் அடுத்ததாக இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் தனுஷ் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் எதற்கும் துணிந்தவன் இதனைத் தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் சூர்யா.

முன்னதாக தனது 2டி என்டர்டெயின்மென்ட் சார்பில் நடிகர் சூர்யா தயாரித்து நடித்துள்ள ஜெய்பீம் திரைப்படம் நேற்று நவம்பர் 2 ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோ வில் நேரடியாக வெளியானது. இயக்குனர் த.சே.ஞானவேல் இயக்கத்தில், சூர்யாவுடன் இணைந்து ராஜிஷா விஜயன், லிஜோ மொள் ஜோஸ் மற்றும் மணிகண்டன்,பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மலைக் கிராமங்களில் வசிக்கும் இருளர் பழங்குடி இன மக்களின் வாழ்க்கையையும் அதில் சூழ்ந்திருக்கும் பிரச்சினைகளையும் பேசும் கதைக்களமாகவும் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டும் உருவான ஜெய்பீம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ஜெய் பீம் திரைப்படத்தை பார்த்து படக்குழுவினருக்கும் சூர்யாவிற்கும் புகழாரம் சூட்டிய நிலையில், உலக நாயகன் கமல்ஹாசனும் ஜெய்பீம் திரைப்படத்தை பார்த்து மனதார பாராட்டினார். இந்நிலையில் சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ சற்று முன்பு வெளியானது. அந்த வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணுங்கள்.