ECR ல் 50 பெண்கள் 500 ஆண்கள் கலந்துகொண்ட மது விருந்தில் ஆட்டம் பாட்டாம், கொண்டாட்டம், கிளப் டான்ஸ் என்று களைகட்டிய நிலையில், அதிரடியாக உள்ளே புகுந்த போலீசார் மொத்த பேரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் செயல்பட்டு வரும் சொகுசு விடுதி ஒன்றில், “மது விருந்து நடப்பதாக” நேற்று இரவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்து உள்ளது. 

இந்த தகவலின் படி, அங்கு விரைந்துச் சென்ற தாம்பரம் போலீஸ் கமி‌ஷனர் ரவி தலைமையிலான குழுவினர், நள்ளிரவு ஒரு மணி அளவில் அந்த சொகுசு விடுதிக்குள் அதிரடியாக நுழைந்து சோதனை செய்தனர்.
 
அப்பொது, அந்த சொகுசு விடுதியில் 50 பெண்கள், 500 ஆண்கள் என அனைவருமே இளைஞர்களாக இருந்த நிலையில், இவர்கள் அனைவரும் பெரும்பாலும் மது போதையில் இருந்ததுடன், தங்களது சுய நினைவைகளை எல்லாம் இழந்து அங்கு ஆட்டம் பாட்டாம், குத்தாட்டம், கிளப் டான்ஸ் என்று, வேற ஒரு உலகத்தில் இருப்பதாய் போதையில் மிதந்து உள்ளனர்.

மது போதை விருந்தில் இப்படி ஒரு இளைஞர் கூட்டத்தைப் பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்த போலீசார், அந்த மது விருந்தில் பங்கேற்ற அனைவரையும் சுற்றி வளைத்து அதிரடியாக கைது செய்தனர். 

கைது செய்யப்பட்டவர்களில் 50 க்கும் மேற்பட்ட இளம் பெண்களும் இருந்து உள்ளனர். 

அத்துடன், கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் கல்லூரி மாணவர்கள் என்பதும் தெரிய வந்தது. 

மேலும், கல்லூரி மாணவர்கள் தவிர, அந்த பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் சாப்ட்வேர் என்ஜினீயர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்த இளம் பெண்கள் மற்றும் இளைஞர்கள் என்பது தெரிய வந்தது.

இதையடுத்து, மது விருந்தில் கலந்துகொண்டு பிடிபட்ட கல்லூரி மாணவ - மாணவிகள் மற்றும் இளம் பெண்களை போலீசார் எச்சரித்த நிலையில், அவர்களது பெயர் மற்றும் முகவரியுடன் கூடிய கடிதத்தில் எழுதி வாங்கிக்கொண்டு அவர்களை கடுமையாக எச்சரித்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார். “வின்ச் என்கிற தனியார் நிறுவன மேலாளர் சைமன் என்பவர் தான், இந்த மது விருந்து கொண்டாட்ட நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்” என்பதை போலீசார் கண்டுப்பிடித்தனர்.

அத்துடன், “இந்த மது விருந்தில் பங்கேற்ற கல்லூரி மாணவ, மாணவிகள் உள்பட அனைவரிடமும் 1500 ரூபாய் முதல் 2 ஆயிரம் ரூபாய் வரை கட்டணமாக பணம் வசூலித்து இந்த மது விருந்து வைத்ததாகவும்” தெரிய வந்தது. 

இதனையடுத்து, அந்த மது விருந்து நடைபெற்ற ரிசார்டிலிருந்து வெளிநாட்டு மதுபானங்கள், சிகரெட் உள்பட பல்வேறு போதை பொருட்களையும் போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.

குறிப்பாக, இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த தனியார் நிறுவனத்தின் மேலாளர் சைமன் உள்பட 5 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர். 

இது தொடர்பக செய்தியாளர்களிடம் பேசிய தாம்பரம் போலீஸ் கமி‌ஷனர் ரவி, “மது விருந்தில் கொக்கைன், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் பயன்படுத்தியாக தெரிய வந்து உள்ளதாக” குறிப்பிட்டார்.

மேலும், “இது குறித்து தற்போது விசாரணையும் நடைபெற்று வருகிறது என்றும், வார விடுமுறை நாட்களில் இது போன்ற ரிசார்டுகளில் சட்ட விரோதமாக மது விருந்து மற்றும் ஆடல் பாடல்களுடன் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன” என்றும், அவர் வேதனை தெரிவித்தார்.

குறிப்பாக, “இதில் பல்வேறு கல்லூரி மாணவ - மாணவிகளே அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர் என்றும், இது போன்ற நிகழ்ச்சிகளில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் இனி அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும்,  தாம்பரம் போலீஸ் கமி‌ஷனர் ரவி கடும் எச்சரிக்கை விடுத்தார்.