தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்திகளில் ஒருவர் தளபதி விஜய்.இவர் அடுத்ததாக நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தயாராகியுள்ள பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்றனர்.அனிருத் ரவிச்சந்தர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்த படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடித்துள்ளார்.செல்வராகவன்,யோகி பாபு,மலையாள நடிகர் டாம் சாக்கோ,அபர்ணா தாஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.இந்த படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின்  இரண்டு பாடல்கள் வெளியாகி இன்டர்நெட்டை கலக்கி வருகின்றன.உலகளவில் இந்த படம் மிக பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் எப்போது அறிவிப்பார்கள் என்று ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்போடு காத்திருந்தனர்.

தற்போது இந்த படம் வரும் ஏப்ரல் 13ஆம் தேதி வெளியாகும் என்றும் படத்தின் சென்சார் வேலைகள் முடிவடைந்து படத்திற்கு யூ/ஏ சர்டிபிகேட் கிடைத்துள்ளது என்றும் ஒரு புதிய போஸ்டருடன் அறிவித்துள்ளனர்.அடுத்தடுத்து ட்ரைலர் உள்ளிட்ட பல அப்டேட்கள் வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் செம உற்சாகத்தில் உள்ளனர்.படத்தினை திரையரங்குகளில் கொண்டாட ரசிகர்கள் கோலாகலமாக தயாராகி வருகின்றனர்.