கவனத்தை ஈர்க்கும் அக்ஷரா ஹாசனின் புதிய பட ட்ரைலர்!
By Anand S | Galatta | March 21, 2022 18:59 PM IST
உலகநாயகன் கமல்ஹாசனின் இளைய மகள் அக்ஷரா ஹாசன் நடிகையாக கோலிவுட் மற்றும் பாலிவுட் திரையுலகில் நடித்து வருகிறார். பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மற்றும் நடிகர் தனுஷ் இணைந்து நடிக்க, இயக்குனர் பால்கி இயக்கத்தில் வெளிவந்த ஷமிதாப் திரைபடத்தின் மூலம் அக்ஷரா ஹாசன் கதாநாயகியாக அறிமுகமானார்.
தொடர்ந்து அஜித் குமார் நடிப்பில் வெளிவந்த விவேகம் சீயான் விக்ரம் கதாநாயகனாக நடித்த கடாரம் கொண்டான் ஆகிய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள அக்ஷரா ஹாசன் மூடர்கூடம் படத்தின் இயக்குனர் நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி மற்றும் அருண் விஜய் இணைந்து நடித்திருக்கும் அக்னிச்சிறகுகள் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ஃபிங்கர்டிப் எனும் வெப்சீரிஸிலும் நடித்துள்ள அக்ஷரா ஹாசன் நடிப்பில் அடுத்து ரிலீசாக உள்ள திரைப்படம் அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு. இயக்குனர் ராஜா ராமமூர்த்தி இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் அக்ஷரா ஹாசன் உடன் இணைந்து அஞ்சனா ஜெயப்பிரகாஷ், ஷாலினி விஜயகுமார், ஜானகி சபேஷ், கலைராணி, சுரேஷ் மேனன், ஜார்ஜ் மரியான் ஆகியோருடன் பிரபல பாடகிகளான உஷா உதூப் மற்றும் மால்குடி சுபா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
வருகிற மார்ச் 25ஆம் தேதி நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் ரிலீஸாகவுள்ள அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு படத்தை ட்ரெண்ட் லௌட் புரொடக்சன் நிறுவனம் தயாரித்துள்ளது. ஸ்ரேயா தேவ் டுபே ஒளிப்பதிவில் இசையமைத்துள்ள அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு திரைப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியானது. சோஷியல் மீடியாவில் பலரது கவனத்தை ஈர்த்துள்ள இந்த ட்ரைலர் இதோ…