ஆகச் சிறந்த இயக்குனராக தமிழ்த் திரையுலகில் அட்டகாசமான படைப்புகளை வழங்கி வருபவர் இயக்குனர் வெற்றிமாறன். முன்னதாக இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் சூரி இணைந்து நடித்துள்ள விடுதலை திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இப்படத்தில் இயக்குனர் கௌதம் வாசுதேவ மேனன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

அடுத்ததாக பிரபல எழுத்தாளர் C.S.செல்லப்பா எழுதிய வாடிவாசல் நாவலை அடிப்படையாகக் கொண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் வாடிவாசல் திரைப்படத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்கிறார். சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள வாடிவாசல் திரைப்படத்தை பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி.S.தாணு அவர்கள் தயாரிக்கிறார்.

இதுவரை ஜல்லிக்கட்டு பற்றி பெரிதும் அறியப்படாத பல சுவாரசியமான ஆழமான விஷயங்களை பற்றி பேசும் வாடிவாசல் படத்தில் இயக்குனர் அமீர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். R.வேல்ராஜ் மற்றும் ஜாக்கி ஒளிப்பதிவு செய்யும் வாடிவாசல் படத்திற்கு G.V.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார் . மேலும் நடிகர் கருணாஸ் வாடிவாசல் படத்தில் வெற்றிமாறனின் உதவி இயக்குனராக பணியாற்றுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முன்னதாக வாடிவாசல் திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை முழுக்க முழுக்க நாட்டுப்புற இசையில் அமைக்கப்பட்டுள்ளதாக G.V.பிரகாஷ்குமார் ருசிகர தகவல்களை பகிர்ந்து கொண்ட நிலையில், நேற்று (மார்ச் 20ஆம் தேதி) வாடிவாசல் திரைப்படத்தின் TEST SHOOT ஆரம்பமானது.  இன்று மார்ச் 21 நடைபெற்ற வாடிவாசல் படத்தின் TEST SHOOT படப்பிடிப்பு தளத்தில் நடிகர் சூரி கலந்துகொண்டார்.

வருகிற ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் வாடிவாசல் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ள நிலையில் தற்போது சென்னையில் உள்ள ECR-ல் வாடிவாசல் படத்தின் TEST SHOOT நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டுக்கான பிரத்தியேகமான தளம் அமைக்கப்பட்டு இயக்குனர் வெற்றிமாறன், நடிகர் சூர்யா மற்றும் படக்குழுவினருடன் மாடுபிடி வீரர்கள் என பரபரப்பாக TEST SHOOT நடைபெற்று வருகிறது இந்நிலையில் வாடிவாசல் திரைப்படத்தின் TEST SHOOT புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகின்றன. அந்த புகைப்படங்கள் இதோ…