சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

RAIN

சமீபத்தில் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் வடகிழக்குப் பருவ மழையால் வெள்ளக்காடாயின. கனமழை காரணமாகத் தமிழகத்தின் அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட மக்கள், தற்பொழுது  பாதிப்புகளிலிருந்து மீண்டு வந்துள்ளனர். நேற்று முதலே மீண்டும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வருகிறது. சென்னையில் காலையிலிருந்து விட்டுவிட்டு ஆங்காங்கே மழை பெய்தது.

கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் 3 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு  உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் இன்று முதல் 3 நாட்களுக்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டது. 

மேலும் வரும் 15 மற்றும் 16-ம் தேதிகளில் தென் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் மிதமான மழையும் வட மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்  எனவும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். 

நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்ப நிலை 32 மற்றும் குறைந்தபட்ச வெப்ப நிலை 25 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.