சினிமா பேட்டையோட ஒரே சூப்பர் ஸ்டார் தலைவா ரஜினிகாந்துக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் என தனது ட்விட்டரில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

harbhajan singh

ரஜினிகாந்தின் பிறந்தநாள் இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளை நள்ளிரவு 12 மணி முதலே ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். காலை முதல் பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ஸ்டாலின், நடிகர் கமல்ஹாசன், மலையாள நடிகர் மம்முட்டி, திரைப்பிரபலங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங்கும் தனக்கே உரிய ஸ்டைலில் வழக்கம் போல் தமிழில் வாழ்த்துகளை கூறியுள்ளார். அவர் தனது ட்விட்டரில் "என் மாருமேல சூப்பர் ஸ்டார்" 80's பில்லாவும் நீங்கள் தான் 90's பாட்ஷாவும் நீங்கள் தான் 2k அண்ணாத்த நீங்கள் தான். சினிமா பேட்டையோட ஒரே சூப்பர் ஸ்டார் தலைவா இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் #HBDSuperstarRajinikanth #SuperstarRajinikanth #ரஜினிகாந்த்
என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

மேலும் தனது நெஞ்சில் ரஜினிகாந்தின் முகத்தை டாட்டூவாக வரைந்துள்ளார் ஹர்பஜன் சிங். தனது ட்வீட்டில் ரஜினியின் சூப்பர்ஹிட் படங்களாக பில்லா, பாட்ஷா, அண்ணாத்த படங்களை குறிப்பிட்டுள்ளார். இந்திய அணிக்காக 1998-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை பல்வேறு போட்டிகளில் ஹர்பஜன் சிங் விளையாடியுள்ளார்.

திரைப்படம், தேசிய அணியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் ஹர்பஜன். இதையடுத்து மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்காக ஐபிஎல் தொடரில் விளையாடியுள்ளார். அண்மையில் தமிழில் வெளிவந்த பிரெண்ட்ஷிப் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். ஆனால் எதிர்பார்த்திருந்த வெற்றியை கொடுக்கவில்லை.

அதனைத்தொடர்ந்து ஹேஷ்டேக்ரஜினிகாந்த் பிறந்தநாளையொட்டி #SuperstarRajinikanth , #HBDSuperstarRajinikanth ஆகிய ஹேஷ்டேக்குகள் டிரென்டாகி வருகின்றன. அவரது ட்விட்டரில் அண்ணா நீங்கள் ரஜின் ரசிகரா என கேட்டு வருகிறார்கள். இன்னும் சிலர் உங்கள் அன்பை நாங்கள் 1000 மடங்கு திரும்ப வெளிப்படுத்துவோம் என தெரிவித்துள்ளார்கள் ரசிகர்கள்.