கொரோனா வைரஸில் இருந்து மரபில் மாற்றமடைந்த புதிய வகை நோய் தொற்று பிரிட்டன் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இதனால் ஐரோப்பிய நாடுகளில் புதிய ஊரடங்கை அமல்படுத்த மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்க ஆலோசனை நடந்து வருகிறது. அதுவரை மக்கள் அனைவரும் முக கவசம் , தனி மனித இடைவெளி ஆகியவற்றை அனைவரும் அவசியம் கடைபிடிக்க வேண்டும் என்ற அந்நாட்டு அரசு வலுயுறுத்தி வருகிறது.


இந்நிலையில் பிரிட்டனில் இருந்து டெல்லி வழியாக சென்னை வந்தவருக்கு இந்த புதிய வைரஸின் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது. இது சுகாதார துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் உறுதி செய்து இருக்கிறார்.

இதுக்குறித்து ராதாகிருஷ்ணன் கூறியது, ‘’ பிரிட்டனில் இருந்து டெல்லி வழியாக சென்னை வந்த 553 பேருக்கும் சோதனை செய்யப்பட்டது. இதில் ஒருவருக்கு மட்டும் இந்த நோய் தொற்று உறுதிசெய்யப்பட்டு இருக்கிறது. அவரை கிங்க்ஸ் இன்ஸ்டிட்யூட்டில் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறோம்.

கடந்த 10 நாட்களில் டெல்லி மற்றும் பிரிட்டனிலிருந்து வந்த அனைவரின் பெயர் பட்டியலும் எடுக்கப்பட்டு, அவர்களுக்கு சோதனை எடுக்கப்பட்டது. இன்றுவரை 96 மணிநேரத்திற்கு வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்படுகின்றனர்.

வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வரும் அனைவருக்குமே ஆர்டி பிசிஆர் சோதனை எடுக்கப்பட்டு வருகிறது. தனிப்படுத்தப்பட்டு இருக்கிறவர்களை மாநகராட்டி குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது , ‘’என ராதாகிருஷ்ணன் கூறியிருக்கிறார்.