நான்கு வயது குழந்தைக்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் முதல் முறையாக செய்யப்பட்டுள்ளது.

சென்னை ராஜீவ் காந்தி அரசு  மருத்துவமனையில் நான்கு வயது குழந்தைக்கு எலும்பு மஜ்ஜை மாற்று  சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அந்த குழந்தைக்கு நியூராப்ளாஸ்டோமா என்ற புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. சிறுநீரகத்துக்கு மேலுள்ள அட்ரினலின் என்ற உறுப்பில் இந்த புற்றுநோய் முதலில் தோன்றி பின் எலும்பு மற்றும் எலும்பு மஜ்ஜை களில் பரவியிருந்தது.

இந்நிலையில் அச்சிறுவனுக்கு உடல் முழுவதும் புற்று நோய் பரவியிருந்த நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு வந்த அந்த குழந்தைக்கு எப்போது எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் இது வரை பெரியவர்களுக்கு மட்டுமே எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை செய்யப்பட்டு வந்தது.  முதல் முறையாக அரசு மருத்துவமனையில் ஒரு குழந்தைக்கு இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

மேலும் புற்றுநோய் செல்கள் எலும்பு மற்றும் எலும்பு மஞ்ஜைகள் இருப்பதால் மற்ற புற்று நோயாளிகளுக்கு வழங்கப்படும் கீமோ தெரபி மூலம் இந்த செல்களை அழிக்க முடியாது. எனவே அதிக சக்தி வாய்ந்த கீமோதெரபி வழங்கப்பட வேண்டும்.  அப்படி வழங்கும் போது புற்றுநோய் செல்கள் மட்டுமல்லாமல் எலும்பு மஜ்ஜை செல்களும் அழிந்து விடும்.  அதனை அந்த செல்களுக்கு மாற்றாக புதிய செல்கள் உடலின் ரத்தத்தில் ஏற்றப்படும் இந்த எலும்பு மஜ்ஜை ஒரே மாதிரியான மரபணு கொண்ட மற்றொரு நபரிடம் இருந்து மட்டுமே பெற்று நோயாளிக்கு வழங்கமுடியும்.

அதனைத்தொடர்ந்து இந்த சிறுவனுக்கு அவனது உடலிலிருந்து எலும்பு மஜ்ஜை எடுத்து சக்திவாய்ந்த கீமோதெரபிக்கு பின் மீண்டும் செலுத்தப்பட்டுள்ளது. எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சைக்கு பின் புதிய செல்கள் வளர மூன்று வாரங்கள் வரை ஆகும். அது வரை அந்த சிறுவன் கிருமிகள் உள் நுழைய முடியாதபடியான சூரிய வெளிச்சம் இல்லாத hepafilter வசதி கொண்ட அறையில் இருந்து சிகிச்சை பெற்றுள்ளான்.

இதேபோல் திருச்சி அரியமங்கலத்தை சேர்ந்தவர்  அப்துல் காதர் வயது 17 ஆகும். 12-ம் வகுப்பு படிக்கும் இவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன் கால் முட்டில் வீக்கம் ஏற்பட்டு, நடக்க முடியாமல் இருந்துள்ளார். இதற்காக திருச்சி அரசு மருத்துவமனை எலும்பு முறிவு பிரிவு மருத்துவரிடம் சிகிச்சைக்காக சென்றிருந்தார். அங்கு அவருக்கு எக்ஸ்ரே எடுத்தபோது தொடை எலும்பில் கட்டி இருப்பது தெரியவந்தது. பின்னர், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் உதவியுடன் கட்டியில் இருந்து திசுவை எடுத்து பரிசோதனை செய்ததில், அவரது தொடை எலும்பில் 15 செ.மீ நீளம், 15 செ.மீ அகலத்தில் ஆஸ்டியோ சார்கோமா என்ற புற்றுநோய் கட்டி  இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

இந்நிலையில் இந்த வகை புற்றுநோய் கட்டி கண்டறியப்பட்டால், அவர்களை சிகிச்சைக்காக சென்னைக்கு பரிந்துரை செய்வது வழக்கம். மேலும், அறுவை சிகிச்சையில் தொடைப்பகுதியுடன் கால் துண்டிப்பு செய்யப்படும்.  இந்த நிலையில், திருச்சி அரசு மருத்துவமனை முதல்வர் வனிதா வழிகாட்டுதலின் படி, எலும்பு முறிவு சிகிச்சை துறை தலைவர் மருத்துவர் கல்யாண சுந்தரம் மேற்பார்வையில், எலும்பு மற்றும் முட்டு சிகிச்சை மருத்துவர் பேராசிரியர் வசந்த ராமன் தலைமையில் மருத்துவர்கள் ரமேஷ்பாபு, ராபர்ட், கோகுலகிருஷ்ணன் மற்றும் புற்றுநோய் மருத்துவர் செந்தில்குமார், மயக்கவியல் துறை தலைமை மருத்துவர் சிவகுமார் குழுவினருடன் இணைந்து தொடர்ந்து 6 மணி நேரம்  அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 

மேலும் அந்த மாணவர் அப்துல் காதரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. தனியார் மருத்துவமனையில் ரு.10 லட்சம் செலவில் மேற்கொள்ளப்படும் இந்த உயர் அறுவை சிகிச்சை, திருச்சி அரசு மருத்துவமனையில் முதல்வர் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவசமாக மேற்கொள்ளப்பட்டது என தெரிவிக்கப்பட்டது.