மாடல் ஆக தனது கலை பயணத்தை தொடங்கி தற்போது சின்னத்திரையில் சீரியல் நடிகையாக அசத்தி வருபவர் ஸ்வேதா கெல்ஜெ.கன்னட சீரியல் மூலம் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமான இவர் தனது நடிப்பால் ரசிகர்களின் கவனம் ஈர்த்தார்.

அடுத்ததாக தெலுங்கில் இவர் நடித்த Madhumasam என்ற சீரியல் பெரிய வெற்றியடைந்தது இதனை அடுத்து ரசிகர்களுக்கு பரிட்சயமான சீரியல் நடிகையாக மாறினார் ஸ்வேதா.இதனை தொடர்ந்து தமிழ் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார் ஸ்வேதா.

சன் டிவியில் ஒளிபரப்பாகி செம ஹிட் அடித்து வரும் வானத்தைப்போல தொடரில் துளசி என்ற கதாபாத்திரத்தில் நடித்து கலக்கி வந்தார் ஸ்வேதா.இந்த தொடரில் இவரது நடிப்பினை பலரும் பாராட்டினர்.இவருக்கென தனியொரு ரசிகர் பட்டாளமே உருவானது.சில காரணங்களால் இந்த தொடரில் இருந்து சில மாதங்களுக்கு முன் விலகினார் ஸ்வேதா.

இவர் மீண்டும் எப்போது சீரியலில் நடிக்கப்போகிறார் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் இருந்து வந்தனர்.தற்போது கலைஞர் டிவியில் விரைவில் தொடங்கவுள்ள கண்ணெதிரே தோன்றினாள் என்ற தொடரில் ஹீரோயினாக நடித்து ரீ என்ட்ரி கொடுக்கவுள்ளார் ஸ்வேதா.மாளவிகா அவினாஷ் இந்த தொடரில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.ஜூன் மாதம் முதல் இந்த தொடர் ஒளிபரப்பாகும் என்று தெரிகிறது.