தமிழ் யூடியூப்பில் பிரபலாமவர்களில் ஒருவர் RJ விக்னேஷ்காந்த்.யூடியூப்பில் பதிவிடும் வீடியோக்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவராக மாறினார் RJ விக்னேஷ்காந்த்.அதுமட்டுமின்றி பல விருது நிகழ்ச்சிகள் மற்றும் ஆடியோ நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கவும் தொடங்கினார்.

அவற்றோடு சில முன்னணி சேனல்களில் அவ்வப்போது தொகுப்பாளராகவும் களமிறங்கி கலக்குவார் விக்கி.துணை நடிகராகவும் சில படங்களில் நடித்து அசத்தியுள்ளார் RJ விக்னேஷ்காந்த்.மீசைய முறுக்கு,நட்பே துணை,மெஹந்தி சர்க்கஸ்,நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா போன்ற படங்களில் நடித்துள்ளார்.

தற்போது தனக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்துள்ளது என்ற நற்செய்தியை ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார் விக்கி.இன்ஸ்டாகிராமில் சில புகைப்படங்களை பகிர்ந்து எளிமையாக நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்தது திருமணத்திற்கு அனைவரையும் அழைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

திருமண தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.இந்த நிச்சயதார்த்த விழாவில் ரியோ,ராஜ்மோகன்,RJ ஷா உள்ளிட்ட சில நட்சத்திரங்கள் கலந்துகொண்டுள்ளனர்.RJ விக்னேஷ்காந்த்துக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.