எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் தனது அசாத்திய நடிப்பை வெளிப்படுத்தி இந்தியாவின் சிறந்த நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் கமல்ஹாசன்.இவர் அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் விக்ரம் படத்தில் நடித்துள்ளார்.இந்த படம் ஜூன் 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் இந்த படத்தினை தயாரித்துள்ளனர்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளளார்.மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, பஹத் பாசில் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.இவர்களுடன் நரைன்,அர்ஜுன் தாஸ்,காளிதாஸ் ஜெயராம்,பிக்பாஸ் ஷிவானி,மைனா,மஹேஸ்வரி VJ,ஸ்வாதிஷ்டா என பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தற்போது இவர்களுடன் பிரபல சீரியல் நடிகர் நடித்துள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.20 வருடங்களாக தமிழ் சின்னத்திரையில் நடிகராக அசத்தி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளனர் ஸ்ரீகுமார் கணேஷ்.பொம்மலாட்டம்,தலையணை பூக்கள்,யாரடி நீ மோஹினி என பல வெற்றி தொடர்களில் நடித்து அசத்தியுள்ளார் ஸ்ரீ.

இவற்றை தவிர தெறி,ரங்கூன்,ஆர் கே நகர் உள்ளிட்ட படங்களிலும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார் நடிகர் ஸ்ரீ.சன் டிவியில் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் வனத்தைப்போல தொடரில் இவர் ஹீரோவாக நடித்து கலக்கி வருகிறார்.இவர் விக்ரம் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பதை படக்குழுவினர் இவரை டேக் செய்து உறுதிசெய்துள்ளனர்.