அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.2 கோடி மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது நேர்முக உதவியாளர் உள்பட 3 பேர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அதிமுக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது ஆவின் நிறுவனத்தில் பல்வேறு துறைகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.3 கோடி மோசடி உள்ளிட்ட அடுத்தடுத்து பல புகார்கள் வந்ததையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என நினைத்து முன்ஜாமின் கோரியிருந்தார்.

இந்நிலையில் அவருக்கு முன்ஜாமின் வழங்க சென்னை  உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டதையடுத்து, அவர் தலைமறைவானார். இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்தார்.  தலைமறைவான ராஜேந்திர பாலாஜியை 8 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் பெங்களூருவில் வைத்து போலீசார் கைது செய்தனர். அவரை ஜாமின் விடுவிக்க தமிழகஅரசு மறுத்து தெரிவித்து வந்த நிலையில், உச்சநீதிமன்றம் அவரை ஜாமின் வழங்கியது. 

அதனைத்தொடர்ந்து ராஜேந்திரபாலாஜி மீது தற்போது மேலும் ஒரு மோசடி புகார் வந்துள்ளது. காரைக்குடி அழகப்பாபுரத்தை சேர்ந்த சண்முகநாதன், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில்  நேற்று அளித்துள்ள புகார் மனுவில்; அரசு வேலை வாங்கி தருவதாக பலரிடம் ரூ.2 கோடி மோசடி செய்துவிட்டதாக ராஜேந்திர பாலாஜி, அவரது நேர்முக உதவியாளர்,  மற்றும் அவரது மனைவி மீது புகார் எழுந்துள்ளது. 

மேலும் இதன் தொடர்பாக சுதாகர் மற்றும் அவரது மனைவி தேவிஸ்ரீயிடம் கேட்டபோது, நான் பணத்தை அமைச்சரிடம் கொடுத்துவிட்டேன். நீ போய் அவரை பார்த்து கேட்டுக்கொள். இனிமேல் எங்களிடம் வந்து பணத்தை கேட்டால், உன்னை ஆட்களை வைத்து அடித்து கொன்று கூவத்தில் போட்டுவிடுவேன் என மிரட்டுவதாகவும்  எனவே, அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.2.05 கோடி பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அவரது உதவியாளர் சுதாகர் மற்றும் அவரது மனைவி தேவிஸ்ரீ ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்று தர வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் எந்த நேரத்திலும் ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்ட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறதுதெரிவிக்கப்படுகிறது.