வித்தியாசமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும் தொலைக்காட்சி விஜய் டிவி.இவர்களது வித்தியாசமான நிகழ்ச்சிகளுக்கென்றே தனியொரு ரசிகர் பட்டாளமே உள்ளது.இவர்களின் நிகழ்ச்சிகளை பார்த்து பல முன்னணி தொலைக்காட்சிகளும் அதையே மீண்டும் தங்கள் சேனலில் ஒளிபரப்புவார்கள்.

அப்படி விஜய் டிவியின் செம ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர்.சாதாரண மக்களிடம் இருக்கும் பாடும் திறமைகளை கண்டுபிடித்து அவர்களுக்கு பெரிய அங்கீகாரம் வாங்கி தரும் ஒரு நிகழ்ச்சியாக சூப்பர் சிங்கர் உள்ளது.இந்த தொடரில் பங்கேற்ற பலரும் பிரபலன்களாக மாறியுள்ளனர்.பலர் பின்னணி பாடகர்களான உயர்ந்துள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் அஜய் கிருஷ்ணா.உதித் நாராயணன் குரலில் பல பாடல்களை பாடி பலரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்திருந்தார்.கோமாளி படத்தில் இவர் ஒரு பாடல் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவருக்கு ஜெஸ்ஸி என்பவருடன் நிச்சயதார்த்தம் சில மாதங்களுக்கு முன் நடைபெற்று முடிந்தது.தற்போது இவர்கள் இருவருக்கும் திருமணம் கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது.இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.புதுமண தம்பதிக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.