லிங்குசாமி இயக்கியுள்ள தி வாரியர் படத்தின் விறுவிறுப்பான டீஸர் !
By Aravind Selvam | Galatta | May 14, 2022 17:49 PM IST

ஆனந்தம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக என்ட்ரி கொடுத்தவர் லிங்குசாமி.முதல் படத்திலேயே பெரும் வெற்றியை பெற்ற இவர் அடுத்ததாக மாதவன் நடித்த ரன்,அஜித் நடித்த ஜி,விஷால் நடித்த சண்டக்கோழி,விக்ரம் நடித்த பீமா,கார்த்தியின் பையா என்று வெற்றி படங்கள் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக மாறினார்
இயக்குனர் மட்டுமின்றி சில படங்களை தயாரித்து அசத்தியுள்ளார் லிங்குசாமி.2015-ல் சூர்யா நடிப்பில் இவர் இயக்கத்தில் வெளியான அஞ்சான் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை,இதனால் கடந்த சில வருடங்களாக படம் எதுவும் இயக்காமல் இருந்த லிங்குசாமி,விஷாலின் சண்டக்கோழி 2 படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார்.இந்த படம் சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.
இதனை தொடர்ந்து மீண்டும் வெற்றி இயக்குனராக வரவேண்டும் என அடுத்த படத்தில் தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ராம் பொத்தினேனி நடிக்கும் வாரியர் படத்தினை இயக்கியுள்ளார் லிங்குசாமி.இந்த படம் தமிழ் தெலுங்கு மொழிகளில் தயாராகி வருகிறது.ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன் நிறுவனம் இந்த படத்தினை தயாரித்துள்ளனர்.தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
க்ரித்தி ஷெட்டி இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.ஆதி இந்த படத்தில் வில்லன் வேடத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.தற்போது இந்த படத்தின் அதிரடியான விறுவிறுப்பான ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த ட்ரைலரை கீழே உள்ள லிங்கில் காணலாம்
Huge announcement on next year's Oscar Awards - the much-awaited update is here!
14/05/2022 03:27 PM
New deleted scene from Koogle Kuttappa - watch it here!
14/05/2022 01:24 PM